Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, February 15, 2011

ஸ்டெம் செல்.,டாக்டர்கள் சாதனை!

பெங்களூர் : இந்தியாவில் முதன் முறையாக ஸ்டெம் செல்லை பயன்படுத்தி பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என்று பெங்களூரைச் சேர்ந்த டாக்டர்கள் தங்களது ஆராய்ச்சி மூலம் சாதனை படைக்க உள்ளனர்.

உலகம் முழுவதும் ஸ்டெம் செல் குறித்து பல்வேறு கட்ட ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.அதன் முயற்சிக்கு பலன் கிடைத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பெங்களூரூவை சேர்ந்த மகாவீர் ஜெயின் ஆஸ்பத்திரி மற்றும் புதுடில்லி யை சேர்ந்த மேதாந்த மெடி சிட்டி ஆஸ்பத்திரி டாக்டர்கள் இதற்கான ஆராய்ச்சியினை மேற்கொண்டு வந்தனர். முன்னதாக இவர்களுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் என்ற அமைப்பு அனுமதி வழங்கியது.

அதனைதொடர்ந்து சர்க்கரை நோய் மற்றும் குடி பழக்கத்தால் பாழாகும் கல்லீரல் போன்றவற்றை ஸ்டெம் செல் மூலம் குணப்படுத்த முடியும் என்று கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் முதல் மேற்கண்ட நோயால் பாதிக்கப்பட்ட 200 நோயாளிகளுக்கு பரிசார்த்த முறையில் பரிசோதனை நடத்த உள்ளனர். இதற்காக கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக ஆராய்ச்சி செய்து தற்போது நோயாளிகளை குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட உள்ளனர். இந்த முயற்சியில் வெற்றி பெறும் பட்சத்தில் வரும் 2014-15-ம் ஆண்டு முதல் ஸ்டெம் செல் மூலம் குணப்படுத்துவது துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதுடில்லியை சேர்ந்த நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இம்யூனாலஜியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் சதிஷ்டோட்டி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த மருந்து கம்பெனிகள் குறிப்பிட்ட சில நோய்களுக்கான ஸ்டெம் செல் மருந்துகளை அடுத்த ஆண்டு வெளியிட தயாராக உள்ளது. அதுபோல் இந்தியாவைசேர்ந்த சிப்லா பார்மா கம்பெனி வரும் 2013 முதல் ஸ்டெம் செல் மருந்து விற்பனையில் இறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!