Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, February 17, 2011

தடை செய்யப்பட்ட மாத்திரைகள்

புது தில்லி: பக்க விளைவுகளை ஏற்படுத்தும் 3 மாத்திரைகளுக்கு இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் கவுன்சில் தடை விதித்துள்ளது.

"கேட்டிபிளாக்சாஸின்' எனப்படும் ஆன்டிபயாட்டிக் மாத்திரை, இரைப்பை-குடல் மருத்துவம் தொடர்புடைய "டெகாசெராட்' மாத்திரை, மனநல மருத்துவம் தொடர்புடைய டீ-ஆன்சிட் மாத்திரை ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

"கேட்டிபிளாக்சாஸின்' மாத்திரை, உட்கொண்டவுடன் திடீரென ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும் அல்லது ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் தன்மை கொண்டதாகும்.

வயிறு உப்புசம்-மலச்சிக்கல்-அடிக்கடி மலம் கழிக்கும் பிரச்னைக்கு உட்கொள்ளப்படுவது "டெகாசெராட்' மாத்திரை.

மன நல மருத்துவத்தில் ஆழ்ந்த மன வருத்தப் பிரச்னையைச் சரி செய்ய பரிந்துரைக்கப்படும் மாத்திரை "டீ-ஆன்சிட்' ஆகும்.

இவை பக்க விளைவுகளை ஏற்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் இந்த மாத்திரைகளை டாக்டர்கள் பரிந்துரைக்கவும், விற்பனை செய்யவும் இந்திய மருந்து தொழில்நுட்ப ஆலோசனைக் கவுன்சில் தடை விதித்துள்ளது.

மூட்டு வலி உள்பட பல்வேறு வலிகளுக்கு வலி நிவாரணியாக பரிந்துரைக்கப்பட்ட "நிமுஸ்லைட்' ஆன்டிபயாட்டிக் மாத்திரையும் பக்க விளைவு காரணமாக அண்மையில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தும் அலோபதி என்று அழைக்கப்படும் ஆங்கிலமுறை மருத்துவத்தில் புழங்கும் மாத்திரைகளாகும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!