Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, February 3, 2011

வீட்டு பெண்ணுகளை [எப்படி காப்பாற்றுவது?

கோவையில் முகாமிட்டு அப்பாவி மக்களிடம் பணம் பறித்து வந்த போலி மாந்த்ரீகர்கள், சாமியார்கள், "அருள்வாக்கு சித்தர்கள்' பலரும் போலீசுக்கு பயந்து வீடு, லாட்ஜ்களை காலி செய்து வெளிமாவட்டங்களுக்கு ஓட்டம் பிடித்தனர். கோவை, செல்வபுரத்தைச் சேர்ந்தவர் வி.டி.ஈஸ்வரன்(49); போலி மாந்த்ரீகர். குடும்ப பிரச்னை, கடன் தொல்லை, தீராத நோய், தொழில் நஷ்டம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மாந்த்ரீகம், ராசிக் கல், பரிகாரம் மூலமாக தீர்வு காண்பதாக விளம்பரம் செய்தார். இதை உண்மையென நம்பி வந்தவர்களிடம் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வசூலித்து மோசடி செய்தார். குழந்தைப் பேறு வேண்டி வந்த பெண்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தார். இவரால் பாதிக்கப்பட்ட பெண் உள்ளிட்ட இருவர் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தனர்.

விசாரணை நடத்திய போலீசார், போலி மாந்த்ரீகர் ஈஸ்வரனை கைது செய்து சிறையில் தள்ளினர். போலீசாரின் அதிரடி நடவடிக்கை கோவையில் முகாமிட்டிருக்கும் போலி மந்திரவாதிகள், பரிகார ஜோசியர்கள், அருள்வாக்கு கூறும் போலி சித்தர்கள், சாமியார்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் போலீசில் புகார் அளித்து விடுவார்களோ என அஞ்சி, மோசடி நபர் கள் பலரும் ஓட்டம் பிடித் துள்ளனர். தாங்கள் வசித்து வந்த வீடுகள், தங்கியிருந்த லாட்ஜ்களை இரவோடு இரவாக காலி செய்துவிட்டு வெளி மாவட்டங்களுக்கு ஓடிவிட்டனர். போலி மாந்த்ரீகர்கள் உள்ளிட்ட மோசடி நபர்களின் விளம்பரங்களை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ள மாநகர போலீசார், அந்நபர்களின் திரைமறைவு வேலைகள் குறித்த விபரங்களை திரட்டி வருகின்றனர். இதனால், பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படும் மோசடி சாமியார்கள் மற்றும் மாந்த்ரீகர்களில் பலரும் மிரண்டு "எஸ்கேப்' ஆகிவிட்டனர்.

கோவை மாநகர போலீஸ் தெற்குப்பகுதி சட்டம் - ஒழுங்கு உதவிக்கமிஷனர் பாலாஜி சரவணன் கூறியதாவது, போலி மாந்த்ரீகர் ஈஸ்வரனை கைது செய் யச் சென்ற போது அவரது வீட்டின் முன் கதவு தாழிடப் பட்டிருந்தது. அங்கிருந் தோரிடம் விசாரித்த போது ஈஸ் வரன், பக்தி பரவசமடைந்த நிலையில் வீட்டினுள் அரை மணி நேரமாக ஆனந்த தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார்' என, தெரிவித்தனர். அந்நபர்களை கடுமையாக எச்சரித்துவிட்டு வீட்டில் நுழைந்து மோசடி நபரை கைது செய்தோம். அவர் வைத்திருந்த பல்வேறு நிறங்களிலான ராசிக் கல், கண் மை போன்ற கலவை உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தோம். "ராசிக் கற்கள் எதற்காக?' என கேள்வி எழுப்பியபோது, "கஷ் டங்களில் இருந்து நம்மை காப்பாற்றும்' என, மோசடி நபர் தெரிவித்தார். இப்போது உனக்கு கஷ்ட காலம் நெருங்கிவிட்டது; உன்னை கைது செய்யப் போகிறோம், ராசி கற்கள் உன்னை காப்பாற்றுமா?' என, கேட்டபோது அதிர்ச்சியடைந்தார். அதன்பின், தான் மோசடியில் ஈடுபட்டு பலரிடம் பணம் வசூலித்ததை ஒப்புக்கொண்டார், அந்நபரை கைது செய்தோம். இவரை போன்ற நபர்களிடம் யாரும் ஏமாறக்கூடாது. கடன் தொல்லை என்றால், அதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகளை கண்டறிய வேண்டும். தீராத நோய் இருந்தால் சரியான சிகிச்சைகளை பெறுவதற்கான சிறந்த டாக்டரை நாட வேண்டும். தொழில் நஷ்டமானால், அதற்கான காரணத்தை கண்டறிந்து தொழிலை மேம்படுத்து வதற்கான வழிமுறைகளை அமல்படுத்த வேண்டும். குடும்பத்தில் பிரச்னை என்றால், இரு தரப்பினரும் தவறுகளை திருத்திக்கொண்டு சேர்ந்து வாழ முயற்சிக்க வேண்டும். அதைவிடுத்து பரிகார பூஜை நடத்தியோ, ராசி கற்களை அணிந்தோ, மை தடவியோ எந்த பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது.

இதுகுறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களிடம் ஏற்பட வேண்டும். மோசடி சாமியார்கள், அருள் வாக்கு சொல்லும் போலி சித்தர்கள், மாந்த்ரீகர்கள் ஆகியோரின் உதவியை நாடினால் பணத்தை இழக்க வேண்டியிருக்கும்; பெண் கள், பாலியல் ரீதியான துன் புறுத்தலுக்கு உள்ளாகி குடும்ப கவுரவத்தையும் இழக்க நேரிடும். இவ்வாறு, உதவிக்கமிஷனர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

Reactions:

1 comments :

காஞ்சி காம கேடி சங்கராச்சாரி புடிகளையே போலிசு

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!