புது தில்லி, பிப். : இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அதன்படி தேர்தல் நடைபெறும் போது, தங்கள் தொகுதிக்கு வந்து வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்கலாம். இதற்காக தங்கள் பாஸ்போர்டை வாக்குச்சாவடியில் பணியில் உள்ளவர்களிடம் காட்ட வேண்டும். அவர்கள் தேர்தல் நடைபெறும் தொகுதியில் உள்ளவர்கள்தான் என்பது அதன் மூலம் அறிந்துகொள்ளப்படும்.
18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்ற பொதுவான விதியுடன், வேறு எந்த நாட்டிலும் அவர்கள் குடியுரிமை பெற்றிருக்கக் கூடாது என்பதும் முக்கியமாகும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி ஒருவருக்கு வாக்களிக்க உரிமை உண்டு என்றால், தேர்தலில் போட்டியிடவும் உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்தியாவில் வாக்குரிமை வேண்டும் என்ற வெளிநாடுவாழ் இந்தியர்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. முன்பு உள்ள விதிகளின்படி ஒருவர் 6 மாதங்களுக்கு மேல் வெளிநாட்டில் சென்று தங்கியிருந்தால், வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களது பெயர் நீக்கப்பட்டுவிடும்.
இந்தியாவைச் சேர்ந்த சுமார்.
1 கோடியே 10 லட்சம் பேர் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்தியாவில் உள்ளவர்களுக்கு:
வாக்காளர் அடையாள அட்டை தொலைந்து விட்டதா. 15 ரூபாய்க்கு டூப்ளிகேட் வாக்காளர் அட்டை வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை பொது தேர்தல் நடக்கிறது. வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப் பட்டு புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும் வழங்கப்படுகின்றன.
0 comments :
Post a Comment