Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, February 25, 2011

இவர்கள் யார்! கிரிக்கட் விளையாட்டை எதிர்க்க?

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதிபெறும் பட்சத்தில், மும்பையில் நடைபெறும் இறுதிப்போட்டியில் அந்த அணியை விளையாட அனுமதிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்" என சிவசேனா மூத்த தலைவர் மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.

14 நாடுகளின் அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்கவிழா நேற்று டாக்காவில் தொடங்கியது. இப்போட்டியை இந்தியா, வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இப்போட்டியின் இறுதி ஆட்டம், ஏப்ரல் 2-ந் தேதி மும்பையில் நடைபெற உள்ளது.

ஆனால் இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறும் பட்சத்தில், அப்போட்டி மும்பையில் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகத்தைச் சிவசேனா கட்சி எழுப்பி உள்ளது.

மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், அந்தக்கட்சியின் மூத்த தலைவருமான மனோகர் ஜோஷி நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில்,

"எங்கள் கட்சித்தலைவர் பால்தாக்கரேயின் எண்ணங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்குப் பாகிஸ்தான் தகுதி பெற்றால், அவர்களை இங்கு (மும்பை) விளையாட அனுமதிப்பதா, வேண்டாமா? என்பது பற்றி பால்தாக்கரே முடிவு செய்வார்" என தெரிவித்தார்.

இவர்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது இந்த விளையாட்டை தடுப்பதற்கு, நாட்டில் நடந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் நடத்திவிட்டு முஸ்லிம்கள் போட்ட பரதேசிகள்தான் இவர்கள்.

பாகிஸ்தானும், இந்தியாவும் வெவ்வேறு பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணித் தலைவர் அஃப்ரிடி "உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நாங்கள் இந்தியாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், இப்போட்டி சிறப்பாக இருக்கும். அத்துடன் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு உத்வேகம் தந்து, லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும்" என்று நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் அணித்தலைவரின் பேட்டி வெளியான அடுத்தநாளே சிவசேனா தலைவரிடமிருந்து இத்தகைய மிரட்டல் வந்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4 comments :

என்ன சொல்றதுனே தெரியலை சார்.

இந்தியாவும் பாக்கிஸ்த்தானும் கீரியும் பாம்புமாய் இருக்கின்றது,இந்திய ராணுவ வீரர்களும் பாக்கிஸ்த்தானின் ராணுவ வீரர்களும் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் சுட்டுக் கொண்டு சாகிறார்கள் எல்லையில்,ஆனால் இந்திய கிரிக்கெட் வீரர்களும் பாக்கிஸ்த்தானிய கிரிக்கெட் வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவிக் கொண்டு விளையாடுவதை நினைக்கையில் வேதனையாக இருக்கின்றது.

ஒரு நாடு நமக்கு துரோகம் இழைக்கின்றது என்று தெரிந்தால் அந்நாட்டின் உறவை முறித்துக் கொண்டு இருப்பதுதான் புத்தி சாலித்தனம்,அதை விட்டு விட்டு தினம் அவர்களோடு சண்டைப் பிடிப்பதும் பின்னே சேருவதுமாக இருந்தால் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பாது காப்பிற்க்கும் தடங்கலாக இருக்கும் அந்த நட்ப்பு.

ஆமா... யார் இந்த பால் தாக்கரே ?

இவர் விடும் அறிக்கைளை பத்திரிகைகள் கண்டும் காணாமல் இருந்தாலே முகவரி இல்லாமல் போயி விடுவார்,இதை எல்லாம் பெருசு படுத்த வேண்டாம் பாஸ்,பேசாமல் சுப்ரமணிய சுவாமி லிஸ்ட்டில் சேர்த்து விடுங்கள்.அவர்தான் சும்மா அறிக்கை விட்டுக் கொண்டே இருப்பார்.

நான் ஒன்னும் பாக்கிஸ்த்தானை ஆதரித்து எழுத வில்லை பேசாமல் உறவை வெட்டி விடுங்கள் என்றுதான் சொல்லுறேன் வெட்டி விட்டால் பால் தாக்கரே போன்றவர்களுக்கு பேசுவதற்கு சேதிகள் கிடைக்காது இந்திய முஸ்லிம்களையும் சீண்டாமலும் இருப்பார்.

பொறுத்து இருந்து பாப்போம்.

//இவர்கள் யார்! கிரிக்கட் விளையாட்டை எதிர்க்க//

அதுதானே...? இவர்களால் பேசமட்டுமே முடியும் வேறொன்றும் முடியாது...

இவர்களால் ஒரு மயிரும் புடுங்க முடியாது..

விடுங்க பாஸ் இந்தாளு எப்பவுமே இப்படிதான் ஊருக்கு ஒரு தாசு ஹி ஹி!
அருவா அருவா

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!