பீய்ஜிங் : சீனாவில் சமூகவலை தளங்கள் மூலம் மல்லிகைப்புரட்சி தீவீரமடைந்து வருகிறது.
உலகில் இணைய தளம் பயன்படுத்தும் நாடுகளில் சீனா முன்னிலை வகிக்கிறது. இந்த தகவல்தொழில்நுட்ப புரட்சி சீனாவுக்கே ஆபத்தாக முடிகிறது. டிவீட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் சீனாவில் மல்லிகைப்புரட்சியினை ஏற்படுத்தி வருகின்றன.இப்புரட்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசுக்கெதிராக சீனாவில் 13 மிகப்பெரிய நகரங்களில் துவங்கின. நாட்டில் ஊழல், வேலையில்லா திண்டாட்டம், அடிப்படை வசதியின்மை உள்ளிட்ட காரணங்களால் மக்கள் கொதித்துப்போயியுள்ளனர். இது சீன பல்கலை. மாணவர்களிடையே வேகமாக பரவிவருகிறது.
சமூக வலைதளமான டிவீட்டரில் நாடுமுழுவதும் உள்ள சமூக ஆர்வலர்கள்,மனித உரிமை அமைப்புகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்வதுடன் புகைப்படத்தினையும் அரசின் செயல்பாடுகள் குறித்து கண்டன கட்டுரைகளையும் எழுதி வருகின்றனர்.இது மேலும் தீவிரமடைந்துள்ளது. முன்னதாக கடந்த ஞாயிறன்று நடந்த மல்லிகைப்புரட்சியினால் பல்வேறு சமூக நல ஆர்வலர்கள், மாணவர்கள் கைது செய்யப்பட்டு் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை உடனடியாக சீனா விடுவிக்க வேண்டும் எனவும் கண்டன குரல்கள் இணையதளம் வாயிலாக பரவி வருவதாக ஜிங்கூவா செய்தி நிறுவனம் கூறுகிறது.
இது குறித்து சீன உள்துறை அமைச்சர் மாஜிகாஜூ கூறுகையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட மாற்றம் தான் இதற்கு காரணம். நாட்டில் சில மீடியாக்கள்,இணையதளங்களை முடக்கி வைத்தும் மல்லிகைபுரட்சி இன்னும் ஓயவில்லை. அனைத்து சீன மக்களுக்கும் அரசியலைப்பு உரிமை உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
0 comments :
Post a Comment