வெளிநாட்டு தொழிலதிபர்கள் மாநாடு ஐதராபாத்தில் நடந்தது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை கூடுதல் செயலர் ஸ்ரீவஸ்தவா குறிப்பிடுகையில் "பாஸ்போர்ட் விண்ணப்பங்களை விரைவில் பரிசீலித்து வினியோகிக்க, இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட உள்ளன.
ஆந்திராவில் மட்டும் ஏழு மையங்கள் அமைய உள்ளன. பாஸ்போர்ட் குறித்த விசாரணைகள், ஆன்-லைன் மூலமே நடக்கும். விண்ணப்பதாரரின் விவரங்கள் மின்னணு தொழில் நுட்பம் மூலம் மாற்றம் செய்யப்படும். இது தொடர்பான ஏழு முன்னோடி திட்டங்கள், தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கர்நாடகாவில் நான்கும், வடமாநிலங்களில் மூன்றும் செயல்படுத்தப்பட்டுள்ளன' என்றார்.
வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சக கூடுதல் செயலர் அதுல்குமார் திவாரி குறிப்பிடுகையில், "மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விஷயங்களை பரிமாறிக்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எலக்ட்ரானிக் பாஸ்போர்ட் திட்டத்தின் மூலம், வெளிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளர் மற்றும் தொழிலதிபர் குறித்த அனைத்து விவரங்களும், ஆன்-லைன் மூலம் கிடைக்கும். கைரேகை பதிவுமுறை மூலம், அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்படுவதால், இதில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை' என்றார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும், 77 பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க, வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
0 comments :
Post a Comment