சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள திரி-வேலி பல்கலைக்கழகத்தில் படித்த இந்திய மாணவர்கள் போலி விசாவில் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை முடியும் வரை மாணவர்களைக் கண்காணிக்க அவர்களது கால்களில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டது. 18 இந்திய மாணவர்களின் கால்களில் இதுபோன்ற கருவிகள் இணைக்கப்பட்டன.
இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்கா தனது நிலையில் இருந்து சிறிது இறங்கி வந்துள்ளது. இது குறித்து சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதர அதிகாரி சுஷ்மிதா கங்குலி தாமஸ் கூறியுள்ளது:
அமெரிக்க குடியேற்றம், சுங்கவரி அமலாக்கத் துறையிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அதில் இந்திய மாணவர்கள் பிரச்னையை சிறப்பாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும், மாணவர்களுக்கு புதிய விசா வழங்குவது குறித்து அமெரிக்க சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் கால்களில் கண்காணிப்புக் கருவி பொருத்தப்பட்டிருக்கும் விஷயத்தில் அதிக கவனம் எடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் மொத்தம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்திய மாணவர்கள் அதிகம் பேர் அங்கு வர வேண்டும் என்றே விரும்புகிறோம். இந்தப் பிரச்னையில் நல்ல தீர்வு விரைவில் ஏற்படும் என்றார் திமோத்தி ரோமர்.
அமெரிக்காவில் குடித்து விட்டு கார் ஓட்டும் பிரபலங்கள் பிடிபட்டால் அவர்களைக் கைது செய்வதற்கு பதிலாக அவர்களைக் கண்காணிக்க காலில் ரேடியோ அதிர்வலைக் கண்காணிப்புக் கருவியைக் கட்டி விடுவது வழக்கம். கைது செய்வதற்கு பதிலாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை இது. இந்திய மாணவர்கள் விஷயத்திலும் கைது செய்வதற்கு பதிலாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இல்லையெனில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டுமென்று முன்னதாக அமெரிக்க அதிகாரிகள் விளக்கம் அளித்திருந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
1 comments :
மாணவர்கள் நலன் காக்கப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து ஏதும் இருக்கமுடியாது.
Post a Comment