Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, February 6, 2011

கூட்டணிக்குள் ஒரே பரபரப்பு!!

தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் அதிக சீட்டுகளை எதிர்ப்பார்க்கிறது. அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க., இடம் பெறுவது தாமதமாவதற்கும் அதிக சீட்டுகள் எதிர்பார்ப்பே காரணமாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம்பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், அக்கட்சி அ.தி.மு.க., அணியில் இடம் பெறுமா அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற குழப்பமும் நீடிக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீட்டினால் தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சி சகாப்தம் முடிந்து விடும் நிலை புதிய திருப்பமாக உருவாகவுள்ளது.

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க., இடம் பெறுவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவும் அறிவிக்கப்பட்டு விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் காங்கிரஸ் தொகுதி பங்கீடு குழுவும், தலைவர் சோனியாவால் அறிவிக்கப்படவுள்ளது. தி.மு.க.,விடம் 80 தொகுதிகள் கேட்பதில் காங்கிரஸ் பிடிவாதமாக உள்ளது. தி.மு.க., தரப்பில் 80 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 48 தொகுதிகள் மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகளையாவது காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இறுதிகட்ட நிபந்தனையை விதிக்கவும் திட்டமிட்டுள்ளது.

அ.தி.மு.க., அணியை பொருத்தவரையில் கூட்டணிக்கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை விறுவிறுப்பாக நடத்தி முடித்துள்ளது. தே.மு.தி.க.,வுடன் தொகுதி பங்கீடு முடித்த பின், அடுத்த கட்டமாக பா.ம.க.,வைப் பற்றி யோசிக்க திட்டமிட்டுள்ளது. தற்போது அ.தி.மு.க., அணியில் பா.ம.க., "வெயிட்டிங்' லிஸ்டில் உள்ளது. தே.மு.தி.க., - ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடித்துக் கொடுக்கும் போது, அ.தி.மு.க., தரப்பில் குறைந்த பட்சம் 126 முதல் 135 தொகுதிகளுக்குள் தான் போட்டியிட வேண்டிய நிலை உருவாகும்.அதேபோல், தி.மு.க., அணியில் காங்கிரசுக்கு 70 முதல் 80 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 10 முதல் 15 தொகுதிகளும் மற்ற சமுதாய அமைப்புகள் கட்சிகளுக்கு தி.மு.க., தரப்பில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டியிருப்பதால், அக்கட்சியும் 135 தொகுதிகள் வரை தான் போட்டியிட வேண்டியதிருக்கும்.

இப்படி கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் பகிர்ந்து கொடுத்து விட்டால், இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலிலும் தி.மு.க.,வால் பெரும்பான்மை பெற முடியவில்லை. எனவே, கடந்த பத்து ஆண்டுகளாக, மத்தியில் தனிக்கட்சி ஆட்சி சகாப்தம் முடிவுக்கு வந்தது போல், இனிமேல் தமிழகத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்பு இருக்கிறது என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இத்திருப்பத்தால் முக்கியமாக தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய கட்சிகள் மக்களிடம் தங்களுடைய தனி ஆட்சி என்று வலியுறுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். இது காங்கிரஸ், தே.மு.தி.க., போன்ற கட்சிகளுக்கு சாதகமாகுமா என்பது சீட் ஒதுக்கீடு மற்றும் தேர்தல் பிரசாரம் ஆகிய நடைமுறைகளில் தெரிந்து விடும் என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையால் இக்கட்சிகள் அனைத்தும் தங்கள் தேர்தல் யுக்தி பற்றி அதிக அக்கறை கொண்டுள்ளன. பீகாரில் அதிக செல்வாக்கு கொண்ட லாலு கட்சியின் தற்போதைய நிலை, இத் தடவை பா.ம.க.,வுக்கு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகள் அதைக் கூட்டணியில் மனமுவந்து ஏற்கத் தயங்குவதே அந்த அபாயத்தை நோக்கிச் செல்லும் அடையாளம் என்று கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!