Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 26, 2011

தனியா? துணையா?

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையிலான கூட்டணி உடன்பாடு எட்டப் படாத நிலையில் திமுக கூட்டணியில் பாமகவுக்கு 31 தொகுதிகளும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் உறுதி செய்யப் பட்டுள்ளன.

குறைந்தது 80 தொகுதிகள் மற்றும் கூட்டணி ஆட்சி ஆகிய கோரிக்கைகளில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருந்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், கே.வி.தங்கபாலு, ஜி.கே.வாசன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு திமுகவின் தேர்தல் குழுவுடன் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் உடன்பாடு எட்டப் பட வில்லை.

திமுக 50 முதல் 60 வரை தொகுதிகளைக் காங்கிரசுக்குத் தர தயாராக இருப்பதாகவேத் தெரிகிறது. எனினும் காங்கிரஸ் கட்சியின் பிடிவாதத்தால் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வருகிறது. கூட்டணி ஆட்சி என்னும் சர்ச்சைக்குள் சிக்க விரும்பாத திமுக தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி குறித்துப் பேசலாம் என்றும் காங்கிரசை சமாதானப் படுத்தி வருகிறது.

காங்கிரசின் பேரங்களுக்கு திமுக வளைந்து கொடுக்காத நிலையில் காங்கிரஸ் தனித்து களம் காணும் திட்டமும் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பீகார் உத்தியை தமிழகத்திலும் பயன்படுத்த ராகுல் தயாராக இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரச் செய்திகள் தெரிவிக்கும் நிலையில் பீகார் நிலைமை வேறு தமிழ்நாடு நிலைமை வேறு பீகார் கண்டது போல தோல்வியைத் தமிழகத்தில் காங்கிரஸ் சந்திக்காது என்றும் காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இது குறித்தும் திமுகவின் மாற்றுத் திட்டம் குறித்த ஆலோசனையில் விவாதிக்கப் பட்டதாகவும் பல நிர்வாகிகளும் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகளுக்கு இன்னும் பணிந்து போக வேண்டாம் என்று கூறிய நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி நாம் அவசரப் படக் கூடாது என்றும் அதிமுக -தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் காங்கிரசையும் பகைத்துக் கொள்வது நல்லதல்ல என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தனித்து போட்டியிட்டாலும் பெரிய அளவில் இழப்பை சந்திக்க போவதில்லை. காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் தன்னுடைய வாக்கு வங்கியின் பலத்தை அது முழுமையாக அறிந்து கொள்ளவும் இத்தேர்தல் ஒரு வாய்ப்பாக அமையும். ஆனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி முறியும் நிலையில் அதன் இழப்பு முழுக்க முழுக்க திமுகவுக்கே என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

1 comments :

எல்லோருமே பச்சோந்திகள் தான்.

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
உங்கள் கேள்விகளை கேளுங்கள். பதிலளிக்க காத்திருக்கிறார்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!