கெய்ரோ : எகிப்து தலைநகர் கெய்ரோவில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையிலான பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பிரமாண்டப் பேரணி வெள்ளிக்கிழமை நடந்தது.
போராட்டத்தின் மையமாக இருந்த தாஹ்ரீர் சதுக்கத்கத்தில் கூடிய பொதுமக்கள் அங்கு வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்தினர். இதில் செல்வாக்குப் பெற்ற முஸ்லிம் மதத் தலைவர் யூசுப் அல்-கரதாவி பேசினார்.
நமது மதம் மாறியிருக்கிறது என்பதை அரபு நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், எகிப்தில் அமையும் புதிய அரசில் பழைய தலைவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
பழைய முகங்களைப் பார்க்கும்போது மக்களுக்கு வறுமையும், பசியும், ஏமாற்றமும்தான் நினைவுக்கு வரும். அதனால் பழைய அமைச்சரவையை ராணுவம் உடனடியாகக் கலைத்துவிட வேண்டும் என்று கரதாவி கோரிக்கை விடுத்தார்.
முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த படுகொலைகள் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
0 comments :
Post a Comment