Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, February 11, 2011

அதிரடி சேவக்"கின் ஆசை?

ஒருநாள் போட்டிகளில் 50 ஓவர்கள் முழுமையாக பேட் செய்ய ஆவலாக உள்ளேன், என இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக் விருப்பம் தெரிவித்து உள்ளார்.

உலக கோப்பை தொடருக்கு தயாராக, இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் பெங்களூருவில் நடந்தது. நாளை தனது முதல் பயிற்சி போட்டியில் இந்திய அணி, "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை, அதிரடியாக துவக்கம் தரும் நான், ஒரு முறை கூட 50 ஓவர்களும் நிலைத்து நின்று விளையாடியது இல்லை. இதற்காக கடந்த 10 ஆண்டுகளாக முயற்சித்து வந்தாலும், கடைசியில் தோல்வியில் தான் முடிந்துள்ளது. அதிகபட்சமாக 43 அல்லது 44 ஓவர்கள் வரை விளையாடி இருப்பேன். ஆனால் இம்முறை அணிக்கு நல்ல துவக்கம் தருவதுடன், 50 ஓவர்கள் முழுமையாக நிலைத்து நின்று விளையாட முயற்சிக்க போகிறேன்.

ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு காரணமாக நெருக்கடி உள்ளதாக தெரியவில்லை. எதிர்பார்ப்புக்கு ஏற்ப, போட்டியில் இப்படித்தான் விளையாட வேண்டும் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை. பயிற்சியாளர் கிறிஸ்டன், கேப்டன் தோனி இருவருமே, வழக்கமான எனது "ஸ்டைலில்' விளையாட அனுமதித்துள்ளனர்.

என்னைப் பொறுத்தவரை அணிக்கு சிறப்பான துவக்கம் தரவேண்டும். 10 பந்தில் 20 ரன்கள், 70, 80 பந்தில் 100 ரன்கள் என எப்படி எடுத்தாலும், நான் மகிழ்ச்சியடைவேன். தவிர, எனது பேட்டிங்கில் சில மாற்றங்களை செய்யலாம் என, கடந்த மூன்றாண்டுகளாக யோசித்து வருகிறேன். "மிடில் ஆர்டரில்' தோனி, ரெய்னா, விராத் கோஹ்லி, யூசுப் பதான், யுவராஜ் சிங் போன்றவர்கள் இருப்பதால், நான் சந்திக்கும் முதல் பந்தில் இருந்து அடிக்கத்துவங்கினேன். இதில் மாற்றம் செய்து புதிய பந்தில், 5, 6 ஓவர்கள் விட்டுவிட்டு, நன்கு "செட்டில்' ஆனபிறகு, ரன்கள் சேர்க்க முடிவு செய்துள்ளேன்.

வங்கதேசத்துக்கு எதிராக 2007 உலக கோப்பை சேர்தது மொத்தம் இரண்டு போட்டிகளில் தான், தோல்வியடைந்து உள்ளோம். மற்றபடி அவர்களுக்கு எதிரான 20 போட்டிகளிலும் வென்றுள்ளோம். கடந்த உலக கோப்பை தொடரில் அவர்களுக்கு எதிராக தோற்றதால், என்ன நடந்தது என எங்களுக்குத் தெரியும். இம்முறை இந்த போட்டிக்காகத்தான் காத்திருக்கிறோம். இதில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறோம்.

ஐ.பி.எல்., போட்டிகள் வந்தபிறகு, வீரர்களின் மனநிலை மாறிவிட்டது. இப்போதெல்லாம் ஒரு ஓவரில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், தயாராக உள்ளனர். இந்த உலக கோப்பை தொடரில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிக எதிர்பார்ப்பை தரும்.
இவ்வாறு சேவக் கூறினார்.

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!