Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, February 1, 2011

தமிழகத்தில் முன்றாவது அணியா? வெளங்குமா!

காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், முதல்வர் கருணாநிதி நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி பற்றி காங்கிரஸ் மேலிடம் உறுதி செய்யாததாலும், தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சி மேலிடம் பரிசீலனை செய்து வருவதாலும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சக மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த 30ம் தேதி முதல்வர் கருணாநிதி, டில்லிக்கு சென்றார். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் உறுதி செய்ததால், இந்த பயணத்தின்போது காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது உள்ளிட்ட விஷயங்கள் பேசி முடிவாகி விடும் என இருதரப்பினரும் நம்பிக்கையுடன் இருந்தனர்.ஆனால், முதல்வர் டில்லி சென்றதும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது மூன்றாம் கட்ட விசாரணையை சி.பி.ஐ., நடத்தியது தி.மு.க., வட்டாரத்தை அதிர்ச்சி அடையச் செய்தது. "ஸ்பெக்ட்ரம்' விவகாரம் தொடர்பான நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான கமிஷன், அறிக்கையை தாக்கல் செய்தது. மேலும், சோனியாவை சந்திப்பதற்கு மதியமும், மாலையிலும் முதல்வரை அலைக்கழித்துள்ளனர். இந்த மூன்று சம்பவங்களும் தி.மு.க., தரப்பிற்கு அதிருப்தியை அளித்தன.

ஒருவழியாக, நேற்று முன்தினம் இரவு சோனியாவை முதல்வர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ராகுல், அகமது படேல் ஆகியோரும் உடனிருந்தனர். அப்போது நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, "காங்கிரசுக்கு 80 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். ஐந்து அமைச்சர் பதவிகள், துணை முதல்வர் பதவி தரப்பட வேண்டும்' என, ராகுலின் விருப்பத்தை சோனியா தெரிவித்ததாகவும், அதற்கு முதல்வர் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு மேல், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இருதரப்பும் தொடர விரும்பாததால், "இரு கட்சிகளின் சார்பில் தொகுதி பங்கீடு குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம்' என, அவர்கள் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.சோனியாவை அவரது வீட்டில் முதல்வர் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களையும் காங்கிரஸ் வெளியிடவில்லை. கூட்டணி குறித்த கருத்துக்களை முதல்வர் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. முதல்வர் எதிர்பார்க்காத வகையில், தொகுதிகள் எண்ணிக்கையை அதிகமாகவும், ஆட்சியில் பங்கும் காங்கிரஸ் கேட்டது அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.சென்னையில் நாளை நடக்கவுள்ள தி.மு.க., பொதுக்குழுவில், காங்கிரஸ் நிபந்தனை குறித்து விவாதித்து முடிவு எடுக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

காங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க., செவிசாய்க்கவில்லை என்றால், ராகுல் பார்முலாவின் படி, காங்கிரஸ் தலைமையில் மாற்று அணியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முடிவை காங்கிரஸ் மேலிடம் பரிசீலிப்பதற்கு தமிழக காங்கிரசாரின் நெருக்கடியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. தே.மு.தி.க., - பா.ம.க., மற்றும் சில சமுதாய அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவும், தேர்தல் முடிவுக்கு பின் எந்த அணி ஆட்சியில் பங்கு தருகிறதோ அந்த அணிக்கு ஆதரவு அளிக்கலாம் என்பது காங்கிரஸ் திட்டம். தி.மு.க.,வை பொருத்தவரை, அதிகபட்சமாக 60 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கவும், தேர்தல் முடிவுக்கு பின் ஆட்சியில் பங்கு தருவது பற்றி முடிவு எடுக்கலாம் என பேச்சுவார்த்தை நடத்தி, தி.மு.க., - காங்கிரஸ் தொகுதி பங்கீடுக்கு இறுதி வடிவம் கொடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் கூட்டணி இழுபறி முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!