உலக கோப்பை கிரிக்கெட்டை முன்னிட்டு காதலர் தினத்தையொட்டி ரிலீசாக இருந்த எங்கேயும் காதல், வானம், கோ உள்ளிட்ட படங்கள் தள்ளிபோகின்றன.
10வது உலககோப்பை கிரிக்கெட் திருவிழா பிப்.19ம் தேதி முதல் ஆரம்பமாகிறது. இந்தமுறை இந்தியா, இலங்கை,வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன. ஆசியா கண்டம் மற்றும் உள்ளூரிலே(இந்தியா) நடப்பதால் இம்முறை இந்திய அணி வெல்ல நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.
இந்நிலையில் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தையொட்டி "எங்கேயும் காதல்", "கோ", "வானம்" உள்ளிட்ட படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுருந்தனர். ஆனால் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடப்பதால் தியேட்டர்களில் ரசிகர்களின் எண்ணிக்கை மிக குறைவாக வரும் என பட அதிபர்கள் கருதுகின்றனர். இதனால் படத்தை இப்போது ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
படரிலீஸ் தள்ளிபோவதால் அந்த படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் மிக வருத்தத்தில் இருக்கின்றனர். குறிப்பாக எங்கேயும் காதல் பட நாயகி ஹன்சிகா மோத்வானி, கோ படநாயகி கார்த்திகா ஆகிய இருவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். காரணம் இருவருக்கும் தமிழில் இதுதான் முதல்படம். ஆனால் பட ரிலீஸ் தள்ளிப்போவது அவர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
0 comments :
Post a Comment