இந்தியாவில் 10 லட்சம் மக்கள் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்படுகின்றனர் என கோவை மருத்துவக்கல்லூரி டீன் விமலா கூறினார். பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அறிவு திருக்கோவிலில் நடந்த மருத்துவர் கருத்தரங்கிற்கு தலைமை வகித்து கோவை மருத்துவ கல்லூரி டீன் விமலா பேசியதாவது, இந்தியாவை பொறுத்தவரை மக்களின் வாழ்க்கை முறை பல்வேறு வகையிலும் மாற்றம் வந்துள்ளது.
தரமான வாழ்க்கை குறித்து விழிப்புணர்வு கிடைக்காததால், பல்வேறு நோய்களுக்கு உள்ளாகின்றனர். இதில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், கேன்சர் உள்ளிட்ட நோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம் காரணமாக ஏற்படுகிறது. முதியவர்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இருதய நோயினால், ஆண்டுக்கு 25 லட்சம் பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.
இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள் மட்டும் செய்து கொள்ள முடிகிறது. இந்த அறுவை சிகிச்சையும், மருத்துவ செலவும் அதிகமாக இருப்பதால், மக்கள் முன்வருவதில்லை. ஆண்டுக்கு 10 லட்சம் மக்களுக்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், ஐந்து லட்சம் மக்கள் இறக்கின்றனர். பெரும்பாலானவர்கள், நோய் முற்றிய நிலையில் காணப்படுகின்றனர்.
ஐந்து லட்சம் மக்கள் சோதனை செய்து கண்டறியும் நிலையில் உள்ளனர்.ஆரம்ப நிலையிலேயே இந்நோய் கண்டுபிடிக்கப்பட்டால், குணப்படுத்த முடியும். இது குறித்து தெரிந்து கொள்ள முடிவதில்லை.நாட்டில், 10 லட்சம் பேர் சிறுநீரக கோளாறினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், ஒரு லட்சம் பேருக்கு சிறுநீரகம் செயலிழக்கிறது. இவர்களில், ஐந்தாயிரம் பேர் மட்டுமே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். மீதமுள்ள 95 ஆயிரம் மக்கள் சிறு நீரக அறுவை சிகிச்சை செய்ய முடியாமல் தவிப்புக்குள்ளாகின்றனர்.நோய் வருவதற்கு முன் பாதுகாத்து கொள்வது அவசியம்.
தமிழக அரசு 200 கோடி ரூபாய் நோய் வருவதற்கு முன் காத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஒதுக்குகிறது. இதில், நூறு கோடி ரூபாய் கேன்சருக்கும், நூறு கோடி ரூபாய் இருதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஒதுக்குகிறது.நோய்களை தவிர்க்க, உடற்பயிற்சி, யோகா போன்றவை தேவைப்படுகிறது. இதன்மூலம் மன அழுத்தத்தை தவிர்க்க முடியும்.மனம், உடல் ஆகியவை புத்துணர்வு பெறும். மக்களும் நோய் பாதிப்பிலிருந்து தப்பித்து கொள்ளலாம். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.
0 comments :
Post a Comment