Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, February 9, 2011

770 ஆபாச வலை தளங்கள் முடக்கம்?

சீயோல் : தென்கொரியாவில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் மற்றும் இணையதளம் மூலம் பாலியல் தொழில் தொடர்பான வர்த்தகம் மேற்கொள்ளபடுவதாக வந்த புகாரையடுத்து அந்நாட்டில் 770 ஆபாச வலைதளங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்கொரியாவில் பாலியல் தொழில் தடுப்பு மற்றும் சைபர் குற்றங்களை கண்காணித்து வரும் தேசிய போலீஸ் ஏஜென்சியினர் நாடு முழுவதும் பாலியல் தொழிலை ஆன்லைன் மூலமும், மற்றும் ஆன்லைன் விளம்பரம் மூலம் செய்துவருதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார் வந்தனர். இதையடுத்து அதிரடியாக செயல்பட்ட தேசிய போலீஸ் ‌ஏஜென்சியினர் 2,271 பேரை கைது செய்தனர். இவர்களில் 1,316 பேர் புரோக்கர்கள் எனவும், 633 பேர் ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் செய்து வந்ததும், 290 பேர் பாலியல் தொழிலுக்காக விளம்பரம் செய்து வந்ததும் தெரியவந்தது.

மேலும் சட்டவிரோதமாக பயன்படுத்திய 770 ஆபாச வ‌லை தளங்களும் முடக்கி வைக்கப்பட்டதாக உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தென்கொரியாவில் பெரும்பாலும் டீன்ஏஜ்களை குறித்து வைத்துதான் புரோக்கர்கள் பாலியல் தொழிலை செய்கின்றனர். இதற்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தி சாட்டிங் மூலம் தங்களது தொழிலை ‌விரிவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!