Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, February 10, 2011

விசாரணையில்? அம்பலமாகும் உண்மைகள்!!

புதுடில்லி : நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76,000 கோடி இழப்பு ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தொலைதொடர்பு துறை மாஜி அமைச்சர் ராஜாவிடம் சி.பி.ஐ, அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒதுக்கீடு செய்வதில் மோசடி செய்தது வாயிலாக, ராஜா ரூ. 3000 கோடி வரை லஞ்சமாக பெற்றிருக்கலாம் என சி.பி.ஐ., - மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணையில் கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை பெற தனியார் நிறுவனங்களுக்கு வரையறுக்கப்பட்டிருந்த கட் ஆப் தேதியை முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த (2007 அக்டோபர் 21ம் தேதியில்) இருந்து எந்த வி‌த முன் அறிவிப்பும் இன்றி (2007 செப்டம்பர் 25க்கு) மாற்றினார் ராஜா என்பது புகார். இதனால் ஆதாயம் பெற்ற தனியார் நிறுவனங்களிடம் ராஜா லஞ்சமாக பெற்ற தொகை ரூ. 3000 கோடி வரை இருக்கும் என்பது சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவின் கணக்கு.

புலனாய்வு அமைப்புகளின் முதல் கட்ட விசாரணையில், இந்த தொகை கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று(வியாழக்கிழமை) சுப்ரீம்கோர்ட்டில் சி.பி.ஐ, தாக்கல் செய்த வழக்கு விசாரணை முன்னேற்றம் குறித்த அறிக்கையில் இது இடம் பெறவில்லை.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!