Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, February 25, 2011

தீரா துயரத்தில் மீனவர்கள்! கேள்விக்குறியான மத்திய, மாநில அரசுகள்?

வேதாரண்யம் : நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் மிரட்டி, இருப்பிடம் காட்டும் கருவி மற்றும் மொபைல் போனை பறித்து அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் நாகை மாவட்டம், ராமநாதபுரம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

இதில் நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெருமாள்பேட்டைச் சேர்ந்த மீனவர்கள் சந்திரசேகரன் (27) குமார் (32) பன்னீர்செல்வம் (30) ஆகியோருக்கு சொந்தமான மூன்று படகில் 14 பேர் கடந்த 22ம் தேதி மதியம் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே, 15 கிலோ மீட்டர் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இவர்களுக்கு வெகு அருகே இலங்கை கடற்படையைச் சேர்ந்த கப்பல் நின்று கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இலங்கை மீனவர்கள், இலங்கை ராணுவத்தினரிடம், "நமது எல்லைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். அவர்களை விரட்டுங்கள்' என தெரிவித்தனர்.

தொடர்ந்து அங்கு வந்த இலங்கை மீனவர்கள் தமிழக படகுக்குள் புகுந்து அவர்களிடம் இருந்து, ஜி.பி.எஸ்., கருவி (இருப்பிடம் காட்டும் கருவி) மொபைல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர். இவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த சிங்கராலையும் (இறால்) எடுத்துச் சென்றனர். "மீண்டும் இப்பகுதிக்கு வந்து மீன்பிடித்தால் கொன்று விடுவோம்' என, கடுமையாக எச்சரித்து மிரட்டி அனுப்பினர்.

மீனவர்கள் நேற்று மாலை கோடியக்கரைக்கு திரும்பினர். இதுபற்றி வேதாரண்யம் கடற்கரை போலீசிலும், மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் புகார் செய்துள்ளனர். தமிழக மீனவர்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!