Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 26, 2011

பணத்திற்கு விலைபோகும் பத்திரிக்கை தர்மம்

புதுடில்லி : அரசியல்வாதிகளும் - பத்திரிகையாளர்களும் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள முடியா தம்பதிகளாகத் தான் இருக்க முடியும் (Journalists and politicians make odd bed fellows) என்று சொன்ன காலம் ஒன்று இருந்தது.

கேரளாவின் புகழ் பெற்ற மாத்ருபூமியின் (Mathrubhoomi) தலைவர் வீரேந்திர குமார் மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் மஹாராஷ்டிரா டைம்ஸ் ஆசிரியர் பாரத் குமார் ரவுத் சிவசேனாவின் ராஜ்யசபா உறுப்பினராவும் சென்ட்ரல் க்ரோனிகல் மற்றும் நவ்பாரத் ஆசிரியர் பிரபுல்ல மகேஸ்வரி காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினராகவும் செயல்படுகின்றனர். ஹித்தாவதா ஆங்கில நாளேட்டின் ஆசிரியர் பன்வாரிலால் புரோஹித் மூன்று முறை பாஜக உறுப்பினராக நாக்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கென்று தனித்தனியே ஊடகம் வைத்துள்ளதும் அதன் நடுநிலைத்தன்மைகளும் அனைவரும் அறிந்த ஒன்று. மூத்த பத்திரிகையாளர் சயீத் நக்வி இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது "ஒரு காலத்தில் பத்திரிகையாளனிடம் இருந்த நேர்மை, துணிவு, தொழில் விழுமியங்களை பாதுகாத்தல் போன்றவை தற்போது குறைந்து வருகிறது. நீரா ராடியா போன்ற அரசியல் தரகர்கள் பத்திரிகையாளர்களை வளைக்க ஆரம்பித்துள்ளது அபாயகரமான அறிகுறி" என்று வேதனை தெரிவித்துள்ளார்.

வெறும் ஜோல்னா பையை மாட்டி கொண்டு எதை பற்றியும் கவலைப்படாமல் உண்மையை உலகுக்கு எடுத்து சொல்லும் சித்திரமாக பத்திரிகையாளன் இருந்தது தற்போது கனவாக உள்ளது. பத்திரிகைத் தொழில் என்பது தற்போது அதிகாரத் தொடர்பு, கார்பரேட் நெருக்கம் அரசியல் வாய்ப்பு என கவர்ச்சிகரமான ஒன்றாக மாறியுள்ளது. சில கட்சிகள் மற்றும் அரசுகள் பத்திரிகைகளை தங்கள் பக்கம் வளைக்க அரசு விளம்பரங்கள் அளித்தல் போன்றவற்றைத் தாண்டி நேரடியாக பத்திரிகையாளனையே வளைக்க இலவச மனைகள் ரயில், விமான பாஸ்கள், மலிவு விலையில் விருந்தினர் விடுதிகள் எனப் பல வசதிகளை செய்து தருகின்றன. கார்பரேட்டுகளும் பண்டிகை அன்பளிப்புகள் கவர் என பல வழிகளில் பத்திரிகையாளர்களை தங்கள் வசம் வளைக்கப் பார்க்கின்றன.

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்” என்ற பழமொழிக்கேற்ப பிறரின் குறைகளைச் சுட்டிக் காட்டும் ஊடகங்கள் தாங்கள் முதலில் சுத்தமானவர்களாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு சில கறுப்பு ஆடுகளால் நேர்மையான பத்திரிகையியல் தர்மத்தோடு இதழியல் நடத்தும் நல்ல ஊடகங்களையும் மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுவர். இது சமூகத்துக்கும் ஊடக துறைக்கும் ஆரோக்கியமான ஒன்றல்ல. இதைத் தவிர்க்க ஊடகத் துறையில் உள்ளவர்கள் அரசியல் தரகர்கள், கார்பரேட்டுகள், அரசியல் கட்சிகளுடன் வரைமுறை தாண்டிய நெருக்கம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இதற்கான முயற்சிகள் பத்திரிகையாளர்கள் சங்கங்களிலிருந்து தொடங்கப்பட வேண்டும். உண்மையை உலகுக்கு எடுத்து சொல்லும் முயற்சியில் இணைய செய்தி ஊடகங்களின் பங்கும் அதிகப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் இவர்களின் ஸ்டிங் ஆப்பரேஷன்களையே மக்கள் இன்னொரு ஸ்டிங் ஆப்பரேஷன் மூலம் பரிசோதிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்படுவர். இதில் தினமனி, தினமலர் விதிவிலக்கல்ல.

Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!