மெல்போர்ன் : ஆஸ்திரேலிய அரசு மாணவர்கள் விசாவில் பல்வேறு கிடுக்கிப்பிடிகள் போட்டதால் அங்கு படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.
ஆஸ்திரேலியாவில் கடந்த 2009 வரை வெளிநாட்டு மாணவர்கள் குறிப்பாக சீனா மற்றும் இந்திய மாணவர்கள் படிப்பதற்காக கணிசமான அளவில் வந்து கொண்டிருந்தனர். அதைத் தொடர்ந்து அங்கு நடந்த இனவெறித் தாக்குதல், விசா கெடுபிடிகள் அதிகரிப்பு இவற்றால் அவர்களின் வருகை கணிசமான அளவில் குறைந்து விட்டது.
அதேநேரம், அமெரிக்கா, பிரிட்டனை நோக்கி இம்மாணவர்கள் படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். இதே நிலை நீடித்தால், 2015ல் வெளிநாட்டு மாணவர்களின் வரத்து 30 சதவீதமாகக் குறைந்து விடும்; அதனால் 36 ஆயிரம் பேர் வேலையிழக்க நேரிடும் என்று பல்கலைக்கழகங்கள் கடந்தாண்டு எச்சரித்திருந்தன.
அவர்கள் கூறியபடி, இந்திய மாணவர்களின் மீதான இனவெறித் தாக்குதல், படிப்புச் செலவு உயர்வு, ஆஸி., கரன்சியின் மதிப்பு உயர்வு போன்ற பிரச்னைகளால் கடந்தாண்டில், இந்திய மாணவர்கள் அங்கு செல்வதில் 50 சதவீதம் குறைந்து விட்டது. ‘வெளிநாட்டு மாணவர்களின் வருகை ஆஸி.,யில் குறைந்ததற்கு காரணம். ஆஸி., அரசின் குறுகிய மனப்பான்மை, தொலைநோக்கின்மை தான்’ என்றனர் நிபுணர்கள்.
1 comments :
//தொழில்நுட்ப பதிவுகளை எழுதும் போது கூகுளை பாராட்டி எனக்கு சலிப்பே வந்து விட்டது எத்தனை முறை தான் பாராட்டுவது என்று இது எப்படி இருக்கு என்றால் ஒரு சிலர் எது எழுதினாலும் ரொம்ப நல்லா எழுதுவாங்க அவர்களை நாம் எத்தனை முறை தான் நன்றாக எழுதறீங்க என்று பாராட்டுவது அது மாதிரி தான்.//
உண்மைத்தான் வாழ்த்துக்கள்
Post a Comment