Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, February 1, 2011

போட்டிகளை சிறப்பாக எதிர்கொள்வோம், தோனி

கடந்த முறை போல் அல்லாமல், இம்முறை நெருக்கடியை கூடுதல் பொறுப்பாக எடுத்துக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு, உலக கோப்பை தொடரில் சாதிக்க முயற்சிப்போம் என, இந்திய அணி கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

கடந்த 2007 உலக கோப்பை தொடரின் போது, டிராவிட் தலைமையில் சென்ற இந்திய அணியின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த எதிர்பார்ப்புகளே அணிக்கு பெரும் நெருக்கடியாக அமைய, முதல் சுற்றுடன் நாடு திரும்பியது. இது இந்திய ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதுபோல, இம்முறை சொந்த மண்ணில் தொடர் நடப்பதால், இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

உலக கோப்பை தொடருக்காக, சிறப்பான முறையில் தயாராகி உள்ளோம். எங்களது திறமையை முழு அளவில் இத்தொடரில் வெளிப்படுத்துவோம். போட்டிகளின் போது ஏற்படும் எதிர்பார்ப்புகள், நெருக்கடிகள் போன்றவற்றை கூடுதல் பொறுப்பாக எடுத்துக்கொண்டு சிறப்பாக சமாளிப்போம். ஆனால் எப்படியும் தோல்வியடைய மாட்டோம்.
மற்றபடி கோப்பை வெல்வது குறித்து ஒன்றும் கூற முடியாது. ஏனெனில் கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில், என்ன நடக்கும் என்று முன்னதாக கணிக்க முடியாது. நாங்கள் ஒருவரை ஒருவர் நம்புகிறோம். தவிர, எங்களது பயிற்சிகள் உள்ளிட்டவைகள் மீதும் நம்பிக்கை வைத்துள்ளோம். இதுதான் ஒவ்வொரு போட்டியையும் சரியான மனநிலையுடன் எதிர்கொள்ள உதவும்.

கடந்த 2007 தொடரில் முதல் போட்டியில் வங்கதேசத்துடன் அடைந்த தோல்வியால், தொடரைவிட்டு வெளியேற நேர்ந்தது. அதனால் இம்முறையும் அந்த அணியுடன் முதல் போட்டியில் பங்கேற்பதால், அப்படித்தான் நடக்கும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் நடந்தவைகள் நடந்ததாக இருக்கட்டும். நடப்பவை எப்போதும் நல்லதாக நடக்கும் என்று நம்புவோம். நான் உங்களை விட அதிக நம்பிக்கை உடையவன்.

மற்ற விளையாட்டுகளில் ஓய்வுகள் எப்படி உள்ளது என்று எனக்குத் தெரியாது. ஆனால் கிரிக்கெட்டை மட்டும் தான் அதிக விமர்சனம் செய்கிறோம். குறுகிய இடைவெளி இருந்தால், அதிக போட்டிகளில் பங்கேற்க வேண்டியது உள்ளதே என்கிறோம். அதிக இடைவெளி இருந்தால், இது மிகவும் அதிகம் என்கிறோம். கிரிக்கெட்டை பொறுத்தவரையில், சரியான அட்டவணையை முடிவு செய்வது கடினம்.
தற்போது கிடைத்திருக்கும் இந்த இடைவெளியே நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால் சிறிய காயங்களில் இருந்தும் மீண்டு, "ரிலாக்சாக' அணிக்கு திரும்ப உதவும்.

இந்திய உலக கோப்பை அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பர் இல்லை என்கிறார் ஒருவர். மற்றொருவர், இடது கை சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்கிறார். பொதுவாக அணித்தேர்வில் எல்லோருடைய கருத்துக்கும் இசைந்து போவது என்பது முடியாத காரியம். என்னைப் பொறுத்தவரையில் தேர்வு செய்யப்பட்டுள்ள 15 பேர்களும், உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படுவார்கள்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!