Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, February 17, 2011

அப்பா,மகன்,.. ரஜினி, தனுஷ்

"தூங்கா நகரம்' படத்தையடுத்து கௌரவ் இயக்கும் படத்தை மீண்டும் தயாரிக்கிறார் தயாநிதி அழகிரி. இது குறித்து கெüரவ் கூறியது:

"தூங்கா நகரம்' படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு. படத்தில் சில காட்சிகளை குறிப்பிட்டு பேசி முன்னணி இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள். இதையடுத்து இயக்கும் படத்தின் திரைக்கதையில் மிகவும் கவனம் எடுத்திருக்கிறேன். அப்பா - மகன் சென்டிமெண்ட் கதை ஒன்று திரைக்கதை உருவாக்கத்தில் இருக்கிறது. அப்பா - மகன் கதையை ஹிந்தி சினிமாவுக்கு கொண்டு செல்ல முயற்சி இருந்தது. இப்போது இல்லை.

மகன் பாத்திரத்தில் நடிக்க தனுஷ் சரியாக இருப்பார். அப்பா பாத்திரத்தில் நடிக்க ரஜினியை தேர்வு செய்து வைத்திருக்கிறேன். இது சாத்தியப்பட்டால் சினிமாவில் எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாக இருக்கும். அந்தப் படத்தை சரியாக செய்வேன். "தூங்கா நகரம்' படத்துக்காக ரஜினி என்னைப் பாராட்டினார். கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் வாழ்த்தினார்கள்'' என்றார் கௌரவ்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!