Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, February 22, 2011

தேர்தளுக்கு முன்பே கிடுக்குபிடி போடும் காங்?

சென்னை : தி.மு.க, கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு முன் ஆட்சியில் பங்கு குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கிணைப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு விதித்துள்ளது. இதை ஏற்க மறுத்துள்ள தி.மு.க., தொகுதிப் பங்கீட்டில் சுமுகமான நிலையை ஏற்படுத்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் தூதுவராக டி.ஆர்.பாலு சோனியாவை சந்திக்க உள்ளார்.

தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. துணைமுதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., குழுவினருடன், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட காங்கிரஸ் குழு பேச்சு நடத்தியது.

கூட்டணி ஆட்சிக்கு உறுதியளிக்க வேண்டும். குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்க ஒப்புக் கொள்ளவேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் அப்போது வலியுறுத்தப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு அரசில் குறைந்தபட்ச செயல் திட்டம் ஏதுமில்லை. அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்படவில்லை. எனவே, அதுபோன்ற முறையை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது.

இந்த கருத்து வேறுபாட்டால், தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை முன்னேற்றம் ஏற்படாமல் நின்றுபோனது. மேலும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தொகுதிப் பங்கீடு பேச்சின்போது, ஆட்சியில் பங்கு என்பது தேவையற்ற ஒன்று என்றும், அதற்கு இப்போது எவ்வித அவசியமும் ஏற்படவில்லை என்றும், தி.மு.க., தரப்பில் கூறப்படுகிறது.

ஆட்சியில் பங்கு அளிப்பது பற்றி, அவசியம் ஏற்பட்டால், தேர்தல் முடிந்து தான் பேச முடியும் அப்படி இருக்கையில், காங்கிரஸ் அக்கோரிக்கையை வலியுறுத்தியதால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்தையின் போது பேசவேண்டிய முக்கிய அம்சங்கள் தடைபட்டுப் போனதாகவும் தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், "தி.மு.க., தலைமையில் பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணிகள் பலமுறை அமைக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லம் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை எழவில்லை. தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, ஆட்சி பங்கு பார்முலாவை முன்வைத்து சந்தித்த 1980 தேர்தலில், படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. இதனால், கூட்டணி ஆட்சி பார்முலா தமிழகத்துக்கு ஒத்துவராது' என்றார்.

பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலைப் போக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தி.மு.க, முடிவு செய்துள்ளது. சோனியாவின் தலையீட்டுக்குப் பின்னரே தி.மு.க., - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் சுமுக உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, முதல்வர் கருணாநிதியின் கருத்துக்களை சோனியாவிடம் கூறுவதற்காக, அவரை சந்திக்க டி.ஆர்.பாலு நேரம் கேட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாளில் சோனியாவை சந்தித்து அவர் விளக்கம் அளிக்க உள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!