Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, February 24, 2011

தமிழ் பண்பாடு தெரியுமா? கவுதம்மேனனுக்கு!!

தமிழ் திரையுலகின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக் நடுநிசி நாய்கள் படமும், படத்தில் இடம்பெறும் சர்ச்சையான காட்சிகளும்தான்.

படத்தின் கதைப்படி அம்மாவே மகனுடன் தவறாக இருப்பது போன்ற காட்சிகள் படம் பார்ப்பவர்களை அலற வைக்கிறது. இதுவொரு சைக்கோ படம் என்று கவுதம்மேனனே விளக்கம் அளித்தாலும், சமூக ஆர்வலர்கள் அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்வதாக தெரியவில்லை. மாறாக விளக்குமாற்றுடன் கவுதம் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வக்கிரமான காட்சிகளுடன் தியேட்டரில் ஓடிக் கொண்டிருக்கும் நடுநிசி நாய்கள் அருவருப்பையும் வக்கிரத்தையும் பகிரங்கமாக படமெடுத்து விட்டிருக்கிறார் கவுதம் மேனன். இதன் மூலம் இளைஞர்கள் வாழ்க்கையை சீரழித்துள்ளார். வளர்ப்பு தாயை கூட தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதுதான் நமது பண்பாடு.

கவுதம்மேனன் அந்த உறவை விரசமாக்கி விஷம் கலந்துள்ளார். எங்கேயாவது இது போன்று தவறு நடக்கலாம். அதை திரையில் வெளிச்சம் போட்டு காட்டக் கூடாது. அப்படி செய்தால் அது போன்ற தவறுகள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். தந்தையே மகனை பாலியல் தொழில் செய்வோர் கூட்டத்தில் அனுமதித்து சித்ரவதை செய்யும் சீன்கள் எவரும் சிந்திக்காதது. இது போன்ற சீன்களை படத்தில் இருந்து நீக்க வேண்டும். இனி அவர் இந்த மாதிரி படமே எடுக்கக் கூடாது.

இதற்கிடையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நடுநிசி நாய்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்க தயாராகிக் கொண்டிருக்கிறதாம். கவுதம் வீட்டை விளக்குமாற்றுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த அக்கட்சியை சேர்ந்த பெண்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதற்கான வியூகம் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல்வேறு நல அமைப்புகளும் நடுநிசி நாய்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டிருக்கின்றனவாம்.

மக்களுக்கு நல்ல விசயங்களை கொண்டுசெல்லவேண்டும், காசு பார்க்க எதைவேண்டுமானாலும் சொல்லலாமா.

Reactions:

3 comments :

//வளர்ப்பு தாயை கூட தாய் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பதுதான் நமது பண்பாடு.//

அது வளர்ப்புத்தாய் கூட இல்லை !!

நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்

முதலில் எது தமிழ் பண்பாடு என்று நீங்கள் விளக்கினால் அடியேன் புரிந்துக் கொள்வோம்.

தமிழ் பண்பாடு, ஒருவனுக்கு ஒருத்தி, ஒழுக்கம் என்பது திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வந்தாலும்,

உள்ளூர பரத்தையரோடு படுத்து உறங்கி வந்தவர்கள் தமிழர்கள்.

தமிழர்கள் ஒழுக்கமாய் வாழ்ந்திருந்தால் ஏன் வள்ளுவர் முதல் வள்ளலார் வரை நன்னெறிகளை மீண்டும் மீண்டும் போதிக்க வேண்டி இருந்தது....

உண்மையில் பண்பாடு, ஒழுக்கம், கலாச்சாரம் என்ற போர்வையில் இந்த சமூகம் பாலியல் ஒழுக்கக்கேடுகளை சுமந்து வந்துள்ளது.

இந்தியாவில் குறிப்பாக எய்ட்ஸ் நோயில் முதலிடத்தில் தமிழகம் இருக்கு.

சிறார் பாலியல் வன்புணர்ச்சியில் பாதிக்கப்படும் குழநதைகள் தமிழகத்தில் அதிகம்.

பெண்சிசுக் கொலையில் தமிழகம் முன்னணி மாநிலம்.

இப்படியான சூழலில் சிறார் பாலியல் வன்புணர்ச்சியை அப்பட்டமாக திரையில் காட்டிய மேன்னனை பாராட்டத்தான் எமக்குத் தோன்றுகிறது.

படத்தில் வருவதைப் பார்த்ததும் யாருமே சிறார் பாலியல் வன்புணர்ச்சி செய்யப் போவதிலலை. ஆனால் அப்படிச் செய்யும் கயவர்களைத் தண்டிக்கவும், இப்படி எல்லாம் நடக்கிறதா என்ற அம்பிகளுக்கு புரிய வைக்க இப்படம் ஒரு சிறு பொறி....

சில மாதம் முன் கோவையில் இரு சிறுவர்ளைக் கடத்தி வன்புணர்ச்சிச்செய்து கொன்ற செய்திகளை நாம் படித்து மறந்து விடுகிறோம். அவற்றைத் தடுக்க, அவ்வாறு செய்பவருக்கு தண்டனைக் கொடுக்க நாம் என்ன செய்துள்ளோம்.............

இந்த மாதிரி ஆளுங்க எடுக்கற அடுத்த படங்களை எவனும் பாக்காம இருக்கணும்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!