Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 12, 2011

மீனவர்களுக்காக போராடும் விஜய்!

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மற்றும் கொல்லப்படுவதை கண்டித்து, இம்மாதம் 22ம் தேதி நாகையில் விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

வேலாயுதம், "நண்பன்" படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் தமது அரசியல் ரீதியான பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட காவலன் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு 50கிலோ இலவச அரிசி மூட்டைகளை வழங்கினார் விஜய். இந்நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போகிறார் விஜய்.

சமீபத்தில் நாகை மீனவர் ஜெயக்குமார், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டார். இதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து பல்வேறு கட்சிகள் இறந்த மீனவர் குடும்பத்தினருக்கு நிதியுதவிகள் செய்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் மீனவர் ஜெயக்குமாரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பா.ஜா. மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதல் கூறி ரூ2.லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.

அரசியல் தலைவர்களை தொடர்ந்து விஜய்யும், வருகிற பிப்ரவரி 22ம்‌ தேதி மீனவர் ஜெயக்குமார் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். அத்துடன் இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டமும் செய்யவுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானபேர் கலந்து கொள்கின்றனர். இதனை திருச்சி, நாகை மாவட்ட விஜய் ரசிகர் தெரிவித்துள்ளனர். விஜய்யின் வருகையை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தடபுடலான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!