Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 26, 2011

நீதிபதியே இப்படி என்றால்! நீதி எப்படி இருக்கும்?

கொச்சி: உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் சகோதரர், 2 மருமகன்களிடம் கறுப்புப் பணம் இருப்பதாக வருமான வரித்துறை கூறியிருக்கிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வருமான வரித்துறை பொது இயக்குநர் இ.டி.லூகோஸ், "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் குறித்து எதுவும் கூற முடியாது. ஆனால், அவரது 2 மருமகன்கள், சகோதரர் ஆகியோரிடம் கறுப்புப் பணம் இருப்பதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்' என்றார்.

கே.ஜி.பாலகிருஷ்ணனின் மருமகன்கள் பி.வி.ஸ்ரீனிஜன் பென்னி ஆகிய இருவரும் வழக்கறிஞர்கள். சகோதரர் கே.ஜி.பாஸ்கரன் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றியவர். குற்றச்சாட்டுகளையடுத்து அவர் ராஜிநாமா செய்தார்.

அவர்களிடம் எப்படி கறுப்புப் பணம் வந்தது என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்களிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் லூகோஸ் தெரிவித்தார். எனினும் எவ்வளவு கறுப்புப் பணம் அவர்களிடம் இருக்கிறது என்பதைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

இது தொடர்பாக கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்படுமா? கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் விசாரணை தற்போது இறுதிநிலையை எட்டியிருப்பதாகவும், அடுத்த மாதத்தில் விசாரணை முடிவடைந்துவிடும் என்றும் லூகோஸ் தெரிவித்தார்.இந்த விசாரணை குறித்து எந்தவொரு அறிக்கையையும் மத்திய அரசு வருமான வரித்துறையிடம் கேட்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய நீதியும், நீதிபதிகளும் இந்த லட்சணம் என்றால் எப்படி வேலங்கப்போகுது, காவிகளை மாற்றாவிடில். பல மாநிலமாக உடையும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!