Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, February 10, 2011

வதந்திகளை பரப்பும் பத்திரிக்கை? த்ரிஷா!

நான் தொடர்ந்து 9 ஆண்டுகள் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டிருப்பதால் என் மீது பொறாமைப்படுகிறார்கள் என்று நடிகை த்ரிஷா வேதனை தெரிவித்துள்ளார். அடிக்கடி வதந்திகளிலும், கிசுகிசுக்களிலும் சிக்கி வரும் த்ரிஷா பற்றிய லேட்டஸ்ட் வதந்தி... இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்யவிருக்கிறார் என்ற செய்திதான். வழக்கம்போலவே இந்த செய்தியையும் த்ரிஷா மறுத்து விட்டார்.

நான் பவன் கல்யாணுடன் `பீம் ஆர் என்ற தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அந்த படத்தில் அவருடன் எனக்கு திருமணம் நடப்பது போல் ஒரு காட்சி இடம்பெறுகிறது. இதற்காக, நிஜமான ஒரு திருமண மண்டபத்தை தேர்வு செய்து, தெலுங்கு முறைப்படி திருமணம் நடைபெறுவது போல் மிக தத்ரூபமாக அந்த காட்சியை படமாக்கினார்கள். ஒருவேளை அதை யாராவது பார்த்து, இப்படி ஒரு வதந்தியை பரப்பினார்களோ, என்னவோ? நெருப்பே இல்லாமல் இந்த வதந்தி புகைந்து இருக்கிறது, என்று கூறியுள்ளார். தான் சினிமாவுக்கு வந்து 9 ஆண்டுகள் ஆகிறது என்று கூறும் த்ரிஷா, பெரிய பெரிய கதாநாயகிகள் கூட அதிகபட்சமாக 5 ஆண்டுகள்தான் சினிமாவில் இருந்திருக்கிறார். நான் ஒய்வில்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறேன். எனவே என் மீது பொறாமைப்படுகிறார்கள். அவர்கள்தான் இப்படி வதந்திகளை பரப்புகிறார்கள் என்றும் கூறினார்.

திருமணம் பற்றிய கேள்விக்கு பதில் அளிக்கையில், எனக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை. நான் திருமணம் செய்துகொள்பவரை பற்றி எனக்கு தெரிய வேண்டும். அவருடைய குணம், சுபாவம், நடத்தை எல்லாம் தெரிய வேண்டும். எனக்கு பிடித்த மாதிரி, என் பெற்றோர்களுக்கும் அவரை பிடிக்க வேண்டும். நான் காதலித்து ஒருவரை திருமணம் செய்துகொள்வதற்கு, என் குடும்பத்தினர் நிச்சயமாக ஆதரவு தெரிவிப்பார்கள்.

எனது வருங்கால கணவர், சினிமாவை சேர்ந்தவராகவும் இருக்கலாம். சேராதவராகவும் இருக்கலாம். அதற்காக, நான் திட்டமிடவில்லை. இந்த விஷயத்தில், நான் சாதி-மத வேறுபாடு பார்க்க மாட்டேன். என்னை திருமணம் செய்துகொள்பவர் நிச்சயமாக ஒரு ஆணழகனாக இருக்க வேண்டும். அவரை எனக்கு பிடிக்க வேண்டும். அவருடன் நான் நீண்ட காலம் வாழ முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட வேண்டும். அப்படி ஒருவர் அமைந்தால், அவரை நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன்.

இந்த வருடம் நிச்சயமாக என் திருமணம் நடைபெறாது. தமிழில், `மங்காத்தா படம் இருக்கிறது. இன்னொரு படம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தெலுங்கில், `பீம் ஆர் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதுபோக மேலும் 2 தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். இந்த ஐந்து படங்களிலேயே வருடம் ஓடிவிடும். எல்லோரும் திருமணம் செய்துகொள்கிறார்களே என்பதற்காக அவசரப்பட்டு திருமணம் செய்துகொள்ள முடியாது. நிதானமாக திருமணம் செய்துகொள்ளலாம், என்று த்ரிஷா கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!