Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, February 12, 2011

காங்கிரசின் ரகசிய சர்வே?

தமிழகத்தில் தனித்து போட்டியிட்டால் காங்கிரசுக்கு செல்வாக்கு எப்படியிருக்கும் என்ற நிலையை அறிவதற்கு ராகுல் தமிழகம் மற்றும் மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் ரகசிய சர்வே எடுத்துள்ளார். அந்த சர்வேயின் முடிவில் தமிழத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் காங்கிரசின் செல்வாக்கு உயரும் என தெரியவந்துள்ளது. எனினும், ராகுல் தமிழகத்தில், ரிஸ்க்' எடுக்க விரும்பவில்லை. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கட்டும் என பச்சைக் கொடி காட்டியுள்ளார்.

இந்த முறை 100 தொகுதிகள் வரை போட்டியிட வேண்டும் என விரும்புகிறார். அவரது விருப்பத்திற்கு ஏற்ப தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் குழு பேச்சுவார்த்தை நடத்தும். இதற்கிடையில் தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறக்கூடிய தொகுதிகள் எவை? எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறைவு? கூட்டணி பலத்துடன் எந்த தொகுதிகளில் வாய்ப்பு உள்ளது என்பதை அறிய ஒரு சட்டசபை தொகுதிக்கு பத்து பேர் வீதம் களம் இறக்கி சர்வே பணியில் ஈடுப்படுத்தியுள்ளார்.

இந்த சர்வே முடிவுக்கு, "ஏ' கிரேடு, "பி' கிரேடு, "சி' கிரேடு என மூன்று வகைகளாக பிரித்து வைத்துள்ளார். அதே போல் ஏற்கனவே ஒவ்வொரு தொகுதிகளின் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி மற்றும் தாய் கட்சியின் (பேரன்ட்பாடி) முக்கிய நிர்வாகி ஒருவரிடமிருந்தும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இன்னொரு சர்வே எடுத்து வைத்துள்ளார். அதில் காங்கிரசுக்கு எவ்வளவு ஓட்டுக்கள் இருக்கிறது, காங்கிரஸ், "சிட்டிங்' எம்.எல்.ஏ.,வுக்கு செல்வாக்கு எப்படி இருக்கிறது? ஆதிதிராவிடர்கள் ஓட்டு எவ்வளவு, சிறுபான்மை ஓட்டுக்கள் எவ்வளவு? எந்த சமுதாயம் ஓட்டுக்கள் பெரும்பான்மையாக உள்ளது? காங்கிரசில் சிறந்த வேட்பாளர்கள் யார்? என்ற கேள்விகளுக்கும் அந்த சர்வேயில் பதில்கள் உள்ளன.

சர்வே விவரங்களையும், தேர்தல் கமிஷன் வெப்செட்டுகளில் உள்ள விவரங்களையும் சட்டசபை தொகுதி வாரியாக தொகுத்து வைத்துள்ளார். இந்த சர்வேயின் அடிப்படையில் தான் தொகுதி பங்கீட்டில் தி.மு.க., கூட்டணியில் சீட்டுகளை பெற வேண்டும் என்றும், பை-பாஸ் ரூட்டில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாமல் தேர்தல் டிக்கெட்டுகளை வாங்குவதை தடுக்கும் முயற்சியிலும் ராகுல் ஈடுபட்டுள்ளார். மொத்தத்தில் தமிழக தேர்தல்களில் கடைபிடிக்கப்பட்ட, கோட்டா சிஸ்டத்திற்கு' முற்றுப்புள்ளி வைத்து புதிய பார்முலாவை ராகுல் சட்டசபைத் தேர்தலில் அறிமுகப்படுத்தவுள்ளார். இந்த பார்முலா காங்கிரஸ்ல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும், மக்கள் ஆதரவை திரட்டும் வியூகத்தையும் ராகுல் அமைத்து வருகிறார். தமிழகத்தில் நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் 13 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!