வாஷிங்டன் : குவான்டனாமோ சிறைக் கைதிகளைக் கொடுமைப்படுத்திய விவகாரத்தில் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்து விட்டார்."குவான்டனாமோ சிறையில் உள்ள, சில கைதிகளை சித்ரவதை செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உத்தரவிட்டார்' என்று அமெரிக்காவில் இயங்கி வரும் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.இந்நிலையில், இம்மாதம் 12ம் தேதி சுவிட்சர்லாந்தில் நடக்க உள்ள, ஒரு ஆண்டு விழாவில் முக்கியப் பேச்சாளராக புஷ் கலந்து கொள்ள இருந்தார்.சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், அவர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அங்கு புஷ் வரும் போது அவரைக் கைது செய்யும் படி அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.இதனால் தான் கைது செய்யப்படுவோம் என்று அச்சம் கொண்ட புஷ், தனது சுவிட்சர்லாந்து பயணத்தை ரத்து செய்துவிட்டார்.
0 comments :
Post a Comment