Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, May 1, 2011

கசந்துபோகும் ஸ்பெக்ட்ரம், கசக்கப்போகும் கூட்டணி?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கனிமொழி எம்.பி.,யின் பெயர் இடம் பெற்றது. அதை சி.பி.ஐ., கையாண்டவிதமும் முதல்வர் கருணாநிதியை எரிச்சல் படவைத்தது. இதையடுத்து, தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம், அறிவாலயத்தில் நடந்தது. அக்கூட்டத்தில், ஸ்பெக்ட்ரம் வழக்கை சட்டரீதியாக மேற்கொள்வது என்ற முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், அக்கூட்டத்தில் காங்கிரஸ் மேலிடம் மீது தி.மு.க., இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், தனியார் "டிவி' நிறுவனம் ஒன்று வெளியிட்ட கருத்துக் கணிப்பில், "தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும்' என அறிவித்தது. அந்த நிலையில், நேற்று முன்தினம் முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் சந்தித்துப் பேசினார்.

வெளியே வந்த ஜெயந்தி, நிருபர்களிடம் கூறும்போது, ""காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது. ஸ்பெக்ட்ரம் பிரச்னை சுப்ரீம் கோர்ட்டில் துவங்கி, பல்வேறு அமைப்புகளால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால், சட்டவழி செல்லவேண்டிய நிலை இருக்கிறது. அதனால், கூட்டணியில் விரிசல் ஏற்பட வாய்ப்பில்லை' என்றார்.

அவரை தொடர்ந்து, மத்திய அமைச்சர் வாசன், முதல்வர் கருணாநிதியை நேற்று சந்தித்து பேசினார். அப்போது, "ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றி மிகவும் பிரகாசமாக உள்ளது. அதிக இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம்' என, கூறினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா நினைக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கூட்டணியில் இருந்து தி.மு.க.,வை வெளியேற்ற சதி நடப்பதாகவும் தெரிவித்தார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!