Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, May 21, 2011

சூடான விவாதங்களில் பங்கேற்ப்பாரா, பயந்து ஒதுங்குவாரா?

சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலகம் இயங்குவதற்கு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இடம் போதவில்லை என, கடந்த தி.மு.க., ஆட்சியில் 1,100 கோடி செலவில் ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. பணிகள் முழுமையாக முடியாத நிலையில், பணிகள் முடிக்கப்பட்ட ஒரு பகுதி கட்டடத்துக்கு மட்டும் சட்டப்பேரவை மற்றும் முதல்வர், துணை முதல்வர் சில அரசுத்துறை அலுவலகங்கள் மாற்றப்பட்டன.

கடந்த சட்டசபைக் கூட்டம் புதிய கட்டடத்தில் நடைபெற்றது. புதிய அரசு பொறுப்பேற்று உள்ள நிலைøயில், ஜார்ஜ் கோட்டைக்கு சட்டசபை மீண்டும் மாற்றப்பட்டு உள்ளது. திங்கள்கிழமை புதிய எம்.எல்.ஏ.,கள் பதவியேற்பு விழா அங்கு நடக்கிறது. 27ம் தேதி முதல் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது. தனது சொந்த ஊரான திருவாரூரில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி இக்கூட்டங்களில் பங்கேற்பாரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. 1991ல் தி.மு.க., பலத்த தோல்வி அடைந்தபோது துறைமுகம் தொகுதியில், அவர் மட்டும் வெற்றி பெற்றார். பின்னர், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டார். 2001 தேர்தலில் தி.மு.க., தோல்வி அடைந்தபோது, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யாமல் தொடர்ந்தார்.

2006ல் அ.தி.மு.க., தோல்வி அடைந்தபோது, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கிவிட்டு, சட்டசபைக்கு வராமல் ஜெயலலிதா இருந்தார். தற்போது, கருணாநிதி சட்டசபைக் கூட்டங்களில் பங்கேற்பது குறித்து பெயர் வெளியிட விரும்பாத தி.மு.க., மூத்த நிர்வாகி கூறும்போது, ""எம்.எல்.ஏ.,கள் பதவியேற்கும் திங்கள்கிழமை அவர் வர மாட்டார். மற்றொரு நாளில் சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொள்வார்,'' எனக் கூறினார். சட்டசபைக் கூட்டங்களில் பங்கேற்பதை அவர் தவிர்ப்பார் எனத் தெரிகிறது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!