Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, May 26, 2011

கேப்டனுக்கே கோட்டாயா? கேள்வியில் கட்சியினர்!?

அ.தி.மு.க., கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க் களை பெற்றுள்ளது. ஆட்சியில் இருந்த தி.மு.க., எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளதால், அதிக எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட இரண்டாவது பெரிய கட்சியாக தே.மு.தி.க., உருவெடுத்துள்ளது. தே.மு.தி.க.,வின் இந்த எதிர்பாராத வெற்றியால், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார்.

அவருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. நேற்று ச.ம.க., தலைவர் நடிகர் சரத்குமார், விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, விரைவில் நடக்கவுள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். விவசாய சங்கத்தினர், போலீஸ் உயர் அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பல தரப்பட்டவர்களும் விஜயகாந்திற்கு நேரிலும், தொலைபேசி வழியாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

தே.மு.தி.க., தலைமை அலுவலக செய்திக்குறிப்பில்,"தே.மு.தி.க., சட்டசபை தலைவராக விஜயகாந்த், துணைத் தலைவராக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், கொறடாவாக கொள்கை பரப்பு செயலர் சந்திரகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பவர்களுக்கு, அமைச்சர் அந்தஸ்தில் சிவப்பு சுழல் விளக்கு பொருத்தப்பட்ட அரசு வாகனம், போலீஸ் பாதுகாப்பு, அரசு வீடு ஆகியவை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், விஜயகாந்த், போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார் என அக்கட்சியினர் ஆணித்தரமாக தெரிவிக்கின்றனர். இதனால், விஜயகாந்த் போலீஸ் பாதுகாப்பை ஏற்றுக்கொள்வாரா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!