தேர்தல் வெற்றிக்கு தங்களது கட்சி தான் காரணம் என்று சண்டை இட்டு கோவையில் மோதிக்கொண்ட அ.தி.மு.க.- தே.மு.தி.க. நிர்வாகிகளால் பதட்டம். கோவையில் சுருளிராஜ் (வயது 50) என்பவர் பீளமேடு சவுரி பாளையதில், அ.தி.மு.க.வின் 15-வது வார்டு பொறுப்பாளராக உள்ளார்.
தேர்தல் முடிவு கொண்டாட்டத்தில் பங்கேற்று பின்னர், நேற்று சவுரிபாளையத்தில் உள்ள அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் இருந்தார். இந்நிலையில், அந்த பகுதியின் தே.மு.தி.க. வார்டு பொறுப்பாளர் ராஜன் (38), தே.மு.தி.க. நிர்வாகி மயில்சாமி ஆகிய இருவரும், அ.தி.மு.க. அலுவலகம் முன்பு நின்று கொண்டு விஜயகாந்தை வாழ்த்தி கோஷமிட்டு, பின்னர் அவ்வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
இதைக்கண்டு கோபமான, அ.தி.மு.க. பொறுப்பாளர் சுருளிராஜ் கட்சி அலுவலகம் முன்பு கார்களை நிறுத்தி இடையூறு செய்யாமல் ஓரமாக நின்று வாழ்த்து தெரிவியுங்கள் என்று கூறவே, ராஜனும், மயில் சாமியும் கேப்டன் விஜயகாந்தால்தான் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது.
அப்படி இருக்கும் போது, எங்களிடம் நீ எப்படி கேள்வி கேட்கலாம் என வாக்குவாதம் செய்து, கைகலப்பில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கிக் கொண்டதில், சுருளிராஜனுக்கு காயம் ஏற்பட்டு, அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார். சுருளிராஜ், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தே.மு.தி.க. பொறுப்பாளர் ராஜனை கைது செய்தனர். வெற்றி பெற்ற இரண்டே நாட்களில் நடந்துள்ள அ.தி.மு.க. – தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கிடையேயான இந்த மோதல் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments :
Post a Comment