Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, May 16, 2011

புகைப்பவர்களே புரிந்து கொள்ளுங்கள் 80 சதவிகிதம் வாய்ப்பு?

மாரடைப்பு ஏற்பட காரணமானவற்றில், புகைபிடித்தல் என்பது நாம் கட்டுப்படுத்தக் கூடியது. 45 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு வரும் மாரடைப் புகளில், 80 சதவிகிதம் புகைபிடிப்பவருக்கே வருகிறது. புகை பிடிக்காதோரை ஒப்பிடுகையில், புகை பிடிப்போருக்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரிக்கிறது.

புகை பிடிப்போரிடம், மாரடைப்பு வருவதற்கான மருத்துவ காரணங்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு சத்து போன்ற ஏதாவது ஒரு காரணம் உடன் இருந் தாலும், அவர்களுக்கு மாரடைப்பு வரும் சாத்தியக் கூறுகள் எட்டு மடங்கு அதிகரிக்கிறது.

உலகம் முழுவதும் நேரும் இருதய நோய்களில், 20 சதவிகிதம் புகை பிடிப்பதாலேயே ஏற்படுகின்றன.

சிகரெட்டில் இருந்து வரும் புகையில், 4,000 நச்சுத் தன்மை வாய்ந்த ரசாயனப் பொருள்கள் கலந்துள்ளன. இவற்றில் முக்கியமான இரண்டு பொருள்கள், இருதயத்தையும், உடலின் அனைத்து உறுப்பு களுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களையும் வெகுவாக பாதிக்கிறது.

1. நிக்கோட்டின், 2. கார்பன் மோனாக்சைடு

சிகரெட் புகையிலுள்ள நிக்கோடின், இருதய தசைக்குச் செல்லும் ரத்தக் குழாயிலும், உடலின் மற்ற முக்கிய உறுப்புகளுக்குச் செல்லும் ரத்தக் குழாயிலும் இறுக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அவ்வுறுப்புகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைபடுகிறது.

ஒரு சிகரெட் புகைத்தாலே, அதிலுள்ள நிக்கோடின், 45 நிமிடங்களுக்கு ரத்தக் குழாய்களில் இறுக்கத்தை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது.

சிகரெட்டில் உள்ள நிக்கோடின் ரத்தக் குழாய்களில், கொழுப்புச்சத்து படிவதை விரைவுபடுத்துகிறது. கொழுப்புச் சத்து படிவங்கள் எளிதில் வெடிப்பு பிளவுகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கிறது. இதுவே புகை பிடிப்போருக்கு, இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம்.

நன்மை பயக்கும் கொழுப்பான எச்.டி.எல்., ரத்தக் குழாயில் படியவிருக்கும் அல்லது படிந்திருக்கும் கொழுப்புச் சத்தை, அதிலிருந்து அகற்றி, கல்லீரலுக்கு எடுத்துச் சென்று, இறுதியில் குடல் வழியாக வெளியேற்றுகிறது.

தீய கொழுப்பான எல்.டி.எல்., கல்லீரலில் உருவாகும் கொழுப்பையும், உண்ணும் உணவில் இருந்து குடல் வழியாக ரத்தத்தில் கலக்கும் கொழுப்பையும், எடுத்துச் செல்லும் இவை, நேராக ரத்தக் குழாயில் படிய வைக்கின்றன. டிரைகிளசைடும் நமக்கு நல்லதல்ல.

இந்த மூன்று கொழுப்புகளில், எல்.டி.எல்., கொழுப்பை அதிகமாகப் படிய வைக்கும் வேலையை நிக்கோட்டின் செய்கிறது.

கார்பன் மோனாக்சைடு, ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ள ஆக்சிஜனை விலக்கி விட்டு, அந்த இடத்தில்தான் போய் அமர்ந்து கொள்கிறது. இதனால் உடலில் ஆக்சிஜன் அளவு குறைகிறது.

சரியான அளவு ஆக்சிஜன் கிடைக்கப் பெறாததால், இருதயமும், மற்ற உறுப்புகளும் எளிதில் சோர்வடைகின்றன.

இருதய ரத்தக் குழாய்களில் அடைப்புகள் இருந்து, அதனால் ரத்த ஓட்டமும் குறையும் பட்சத்தில், ஆக்சிஜனும் குறைவாக இருந்தால் அதன் பக்க விளைவுகள் பன்மடங்காகி, மாரடைப்பு வரலாம் அல்லது நாளடைவில் இருதயத் தசை மிகவும் பல்வீனமாகலாம்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!