Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, May 6, 2011

போதைக்கு அடிமையாகும் சிறுவர்கள்! ஓர் எச்சரிக்கை!!

மும்பை : மும்பையில் உள்ள மன்குர்ட், கோவண்டி குடிசைப் பகுதிகளில் அண்மையில் 12 பேர் கொண்ட டாக்டர்கள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. அதில், அந்த குடிசைப் பகுதிகளில் வசிக்கும் சிறுவர்களில் 90 சதவீதம் பேர், புகை, மது, பாக்கு உள்ளிட்ட போதை பொருட்களுக்கு அடிமையாகி உள்ளது தெரியவந்தது. ஏழு வயதிலேயே இந்த சிறுவர்கள் சிகரெட் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தத் தொடங்குவது தெரியவந்தது

இதுகுறித்து அந்த டாக்டர்கள் குழுவினர் கூறியதாவது: இங்குள்ள குடிசைப் பகுதியில், 300 குடும்பங்களை தேர்ந்தெடுத்து, 1,500 சிறுவர்களிடம் இந்த ஆய்வுகளை நடத்தினோம். இதில், 80 சதவீத சிறுவர்கள், சிகரெட் மற்றும் மதுப்பழக்கங்களுக்கு அடிமையாகி உள்ளனர். 90 சதவீதம் பேர், போதை பாக்குகளை பயன்படுத்துகின்றனர். மேலும், இந்த சிறுவர்கள் 10 வயதிலேயே குற்றச் செயல்களிலும் ஈடுபடத் தொடங்குகின்றனர். போதைப் பாக்கு பயன்படுத்துவதால், இந்த சிறுவர்களில் 1,000 பேருக்கு மேல், பல் தொடர்பான அபாயமான நோய்கள் ஏற்பட்டுள்ளன.

புகை மற்றும் மது பழக்கங்களால், 200 க்கும் அதிகமான சிறுவர்கள், சுவாசக் கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, எங்கள் ஆய்வறிக்கையை, மாநில தலைமை செயலரிடம் அளித்துள்ளோம். அந்த அறிக்கையின் அடிப்படையில், பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள உள்ளதாக, அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்த குடிசைப் பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோருக்கு, சரியான வேலையோ, கல்வியறிவோ எதுவும் இல்லை. எனவே, அவர்கள் தங்கள் பிள்ளைகளை, சரியான முறையில் கண்காணிக்கத் தவறி விடுகின்றனர். கட்டுப்பாடற்ற சுதந்திரம் கிடைப்பதால், அந்த சிறுவர்கள், தவறான நபர்களுடன் சேர்ந்து, தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். இவர்கள் வளர்ந்து 20 வயதை தொடும் முன்பாகவே, பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடத் தொடங்கி விடுகின்றனர். எனவே பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டியது மிக அவசியம். இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

1 comments :

வறுமையில் வாழ்ந்த பல குழந்தைகள் இன்று பலர் நல்ல நிலையில் இருப்பதை நாம் அறிவோம்.. பெற்றோரின் வளர்ப்பு சரியில்லாத பொழுது தான் இந்த நிலைக்கு தள்ள படுகிறார்கள்... பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது எந்த நிலையிலும் அதிகமாக கவனத்துடன் வளர்ப்பது நலம்.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!