ராமநாதபுரம் மாவட்டம், புல்லந்தையைச் சேர்ந்தவர் தினகரன்(30). கராத்தே மாஸ்டராக உள்ள இவர், சாதிக்கும் எண்ணத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரே மூச்சில் 151 மெழுகுவத்தியை ஊதி அணைத்து கின்னஸ் சாதனை செய்ததை அறிந்த தினகரன், அதை முறியடிக்க முடிவு செய்தார்.
இதற்கான பயிற்சி எடுக்க கிராம பள்ளிக்கு சென்றபோது, அங்குள்ள ஆசிரியர்கள் அனுமதி மறுத்து, வெளியேற்றினர். இதையெல்லாம் கடந்து, சாதனைக்கு தயாரானார் தினகரன். உலக சாதனையாளர்களை தேர்வு செய்யும் அமைப்புகளில் ஒன்றான "எலைட்' உதவியை நாடினார். கோவையில் கடந்த ஏப்.,30ல் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு வாய்ப்பு தரப்பட்டது. ஒரே மூச்சில் 201 மெழுவத்திகளை ஊதி அணைத்து சாதனை படைத்தார். இவரது சாதனையை அங்கீகரித்த "எலைட்' அமைப்பு, உலக சாதனையாக ஏற்று சான்றிதழ் வழங்கியது.
தினகரன் கூறியதாவது: நண்பர்கள் உதவியே என் சாதனைக்கு அடித்தளமாக இருந்தது. எத்தனையோ எதிர்ப்பை மீறி தான் இந்த பாராட்டு கிடைத்துள்ளது. கின்னஸ் சாதனையை முறியடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால், எனது பாராட்டை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை, என்றார்.
0 comments :
Post a Comment