Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, May 19, 2011

மருத்துவத்தின் மகத்துவம், ஒனியன்!

ஆஸ்திரேலியாவில் உள்ளது சதர்ன் குவின்ஸ்லேண்ட் பல்கலைக்கழகம்.

அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் பெரிய வெங்காயத்தில் இருந்து எடுத்த சத்துக்களை எலிகளுக்குச் செலுத்தி மும்முரமாக ஆய்வு செய்தார்கள். ஆய்வில் சில முடிவுகள் தெரிய வந்தன. அதே சத்துக்களை மனிதர்களுக்கும் செலுத்தி ஆய்வு செய்தார்கள். அதிலும் சில முடிவுகள் தெரிய வந்தன.

கொழுகொழு எலிகளையும், குண்டான மனிதர்களையும் ஒல்லியாக்கவல்ல சத்துகள் வெங்காயத்தில் இருக்கின்றன என்பதுதான் அதில் முக்கியமான முடிவு.

வெங்காயம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்துவிடுகிறதாம்.

சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதிலும் வெங்காயத்துக்கு மிகப் பெரிய பங்குண்டு. ரத்த அழுத்தம் சீராகிவிடுகிறதாம். கல்லீரல் பாதிப்பைக் கட்டுப்படுத்துகிறதாம். வெங்காயத்தைப் பச்சையாகவோ, சமைத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

சரி,சரி... கண்ணைக் கசக்காதீர்கள்! நிறுத்திவிடுகிறோம்.

2 comments :

கண்ணை கசக்கினாலும் நல்ல விஷயம் தானே.. வெங்காயம் சாப்பிடுவதால் இன்னும் நிறையவே நன்மைகள் இருக்கு.. பகிர்வுக்கு நன்றி

பயனுள்ள நல்ல தகவல் தந்தீர்கள் வாழ்த்துகள்......

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!