Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, May 17, 2011

இந்திய மாணவர்களை பின்பற்றசொல்லும், அமெரிக்க அதிபர்

அமெரிக்க மாணவர்கள் இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்காலத்தில் போட்டிகள் இன்னும் கடுமையாக இருக்கும். இந்தியாவிலும், சீனாவிலும் மாணவர்கள் கடினமாக உழைத்து முன்னேறி வருகின்றனர்.

எனவே தங்களது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உள்நாட்டு போட்டியை சமாளித்தால் போதும் என்ற நிலை இனி இருக்காது. வெளிநாட்டிலிருந்து போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சவாலான சூழல் உருவாகி வருகிறது.

இந்திய, சீன மாணவர்கள் சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் படிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தங்களது இலக்கை எட்டுவதற்காகக் கடினமாக உழைக்கின்றனர். இப்போது நாம் உலகமயமாக்கல் சூழலில் உள்ளோம். இந்த உலகில் வலிமையானதுதான் மிஞ்சும். திறமைபடைத்தவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்புகள் கிடைக்கும். இதை அமெரிக்க மாணவர்கள் உணர வேண்டும்.

படிப்பை முடித்துவிட்டு நீங்கள் வேலை தேடச் செல்லும்போது நீங்கள் நாஷ்விலே பகுதியைச் சேர்ந்தவருடனோ அல்லது அட்லாண்டா பகுதியைச் சேர்ந்தவருடனோ போட்டியிடப் போவதில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வந்துள்ள திறமைமிகுந்த மாணவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இதற்கு அனைத்து அமெரிக்க மாணவர்களும் தயாராக வேண்டும். வெறுமனே ஒரு சில அமெரிக்க மாணவர்கள் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. அனைத்து மாணவர்களும் வெற்றி பெற்றாக வேண்டும். மாணவர்கள் வெறும் படிப்புடன் நின்றுவிடாமல் பட்டயப் படிப்போ அல்லது தொழில் படிப்போ கூடுதலாக கற்றுக் கொள்வது மிகவும் சிறந்தது. இவையில்லாமல் வெற்றி பெற முடியாது. போட்டிகளை எதிர்கொள்வதும் கடினம் என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!