Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, May 21, 2011

அதிக மார்க்குக்காக, அட்மிஷனை தவிர்க்கும் அரசு பள்ளிகள் !!

கடந்த சில ஆண்டுகளாக, தேர்ச்சி சதவீதம் குறையும் அரசு பள்ளிகளுக்கு பள்ளி கல்வித்துறை தரப்பில் நோட்டீஸ் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக, நடப்பாண்டு அதிகமான மாணவர் சேர்க்கையை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிர்த்து வருகின்றனர்.

அரசு பள்ளிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆசிரியர்களுக்கு பாடம் வாரியாக சிறப்பு பயிற்சி வகுப்பு, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத்தரும் ஆசிரியருக்கு ஊக்கப்பரிசு, அரசு பள்ளியிலும் சிறப்பு வகுப்பு என பள்ளி மாணவர்களின் தேர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் குறையும் பள்ளிகளுக்கு, அதற்கான காரணம் கேட்டு கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. கல்வி அதிகாரிகள் முன்னிலையில், அதற்கான விளக்கம் அளிக்க உத்தரவிடப்படுகிறது.

மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற, ஆசிரியர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்பதற்காக, இந்நடைமுறை கொண்டு வரப்பட்டது. தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அதிகமான மாணவர்களை வகுப்பில் சேர்க்க அரசு பள்ளிகள் தவிர்த்து விடுகின்றன. அதிக மாணவர்களை சேர்த்தால் தேர்ச்சி சதவீதம் குறைந்து, தேவையில்லாத பணி சுமையை ஏற்க வேண்டும் என கருதி தலைமை ஆசிரியர்கள் புதிய மாணவர் சேர்க்கையை குறைத்துக் கொள்வதாக பெற்றோர் புகார் தெரிவித்துவருகின்றனர்.

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில், ஒன்பது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 உள்ளிட்ட வகுப்புகளுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு செல்லும்போது, அரசு பள்ளிகளில் "அட்மிஷன்' கிடைப்பதில்லை. பெற்றோர் சிலர் கூறுகையில்,"உங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் குழந்தையை சேருங்கள் என கூறி அரசு பள்ளிகளில் சேர்க்கை தர மறுக்கின்றனர். புதிதாக வேறு இடத்துக்கு குடிபெயரும்போது, வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பள்ளியில் சேரலாம் என முயற்சித்தால் "அட்மிஷன்' கிடைப்பதில்லை,' என்றனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!