பாஸ்டன் : அமெரிக்காவில், அதிக சம்பளம் பெறும், தலைமை நிர்வாக அதிகாரிகள் சி.ஈ.ஓ., பட்டியலில் இந்தியர்கள் ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின், வால் ஸ்டிரீட் பத்திரிகை, சமீபத்தில், அமெரிக்க கம்பெனிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளின், கடந்தாண்டு, சம்பளம், தொடர்பான ஆய்வு மேற்கொண்டது. மொத்தம் 350 கம்பெனிகளின், தலைமை நிர்வாக அதிகாரிகள் பட்டியலில், இந்தியர்களான பெப்சி நிறுவன இந்திரா நூயி, "ஆபீஸ்மேக்ஸ் 'ரவி சாலிகிராம்," மோட்டரோலா 'சஞ்சய் ஜா, "குவெஸ்ட் டயக்னாஸ்டிக்' சூர்யா மகோபத்ரா, "சிட்டிகுரூப்' விக்ரம் பண்டிட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு (2010), இந்திரா நூயி, 64 கோடி ரூபாய் வருமானத்துடன் இந்தியர்களில் முதல் இடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்து, 55 கோடி ரூபாயுடன் ரவி சாலிகிராம், 54 கோடியே 83 லட்சம் ரூபாயுடன் சஞ்சய் ஜா வருகின்றனர். இச்சம்பளப்பட்டியலில், வியாகாம் தலைமை நிர்வாக அதிகாரி பிலிப்பி டவ்மான் 387 கோடியே 78 லட்சத்துடன் முதல் இடத்தில் இருக்கிறார். ஆரக்கிள் நிறுவனர் லேரி எலிசன், 315 கோடியே 56 லட்சம் ரூபாயுடன் 2ம் இடத்தில் உள்ளார்.
0 comments :
Post a Comment