உலகிலேயே குழந்தைகள் நோய்வாய்பட்டு இறப்பது இந்தியாவில் மிக அதிகமாக உள்ளது. மருந்து கம்பெனிகளின் வளர்ச்சி, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் என்று பல நிறைவான பணிகள் இருந்தாலும் குழந்தைகள் இறப்பு அதிகமாகவே உள்ளது.
எனவே, வரும் 10 ஆண்டுகளை நோய் தடுப்பூசி தயாரிக்கும் ஆண்டாக மாற்ற வேண்டும். இந்தியாவில் பீகார் மாநில முதல் அமைச்சர் நிதிஷ்குமார் குழந்தைகள் நோய் தடுப்பூசி திட்டத்தை மிக சிறப்பாக செயல்படுத்தியுள்ளார். பீகாரில் அவருக்கு உள்ள செல்வாக்கு என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நிதிஷ்குமார் போன்ற தொலைநோக்கு உள்ள தலைவர்கள் எந்த கடினமான சூழ்நிலையையும் எதிர் கொண்டு வெற்றிகரமாக செயல்படுவார்கள். இவரை போன்ற தலைவர்களை தான் மக்கள் விரும்புகிறார்கள். இத்தகைய தலைவர்கள் வெறும் வாக்குறுதி அளிப்பதுடன் நின்று விடுவதில்லை. அதை செயல்படுத்துவதிலும் முனைப்போடு உள்ளனர் என்றார்.
உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பில்கேட்ஸ்சின் மைக்ரோ சாப்ட் நிறுவனம் தான் அதிக அளவு நிதி உதவி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1 comments :
உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பில்கேட்ஸ்சின் மைக்ரோ சாப்ட் நிறுவனம் தான் அதிக அளவு நிதி உதவி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.//
வாழ்த்துக்கள்
Post a Comment