தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலர் பெ. மணியரசன், திருச்சியில் பாவலர் முவ. பரணர் எழுதிய "ஆண்டகை' பாட்டிலக்கிய நூல் வெளியீட்டு விழாவில் "முள்ளிவாய்க்காலில் மூண்ட நெருப்பு' என்ற தலைப்பில் அவர் பேசினார்.
’’எழுத்தும் வாழ்க்கையும், பேச்சும் வாழ்க்கையும் வெவ்வேறாகிவிட்டது. எழுதுபவர்கள் எழுதுவதைப் போல வாழ்வதில்லை. தங்களின் தவறுகளை தனிமனித அந்தரங்கம் என்று கூறிவிடுகின்றனர்.
சங்க காலத்துக்குப் பிறகு, இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமானால், களப்பிரர் காலத்துக்குப் பிறகு, சோழர்களின் காலம் கொஞ்சம்தான். அதைத் தொடர்ந்து மாலிக்காபூர், நவாப்புகள், நாயக்கர்கள், மராட்டியர்கள், வெள்ளையர்கள் தமிழர்களை ஆண்டார்கள்.
நீண்ட காலமாக நாம் அடிமைகளாகவே இருக்கிறோம். இன்றுவரை நாம் விடுவிக்கப்படவே இல்லை. முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற சம்பவம் நமக்கு பாடம். எந்த இனத்துக்கும் இப்படியொரு படிப்பினை கிடைக்காது. இன்னமும் மத்திய அரசுக்கு மனு எழுதிக் கொண்டேதான் இருக்கப் போகிறோமா?
துணிவின்மை, சந்தர்ப்பவாதம் இவற்றால் படித்தவர்கள்தான் மக்களிடத்தில் தவறான கருத்துகளை விதைத்துவிடுகின்றனர். எழுத்தாளர்கள் பதவி அரசியலை அண்டிப்பிழைக்கும் நிலையைத் தொடரக் கூடாது. எழுத்துரிமைக்காக உயிரையும் கொடுக்கலாம்; ஆனால், உயிருக்காக எழுத்துரிமையை சாகடித்துவிடக் கூடாது.
உண்மையை எழுத முடிந்தால் எழுதுங்கள், இல்லாவிட்டால் தாள் வெள்ளையாகவே இருக்கட்டும், பின்னாளில் வருபவர்களாவது எழுதிக் கொள்வார்கள்; கிறுக்கி வைத்துவிட வேண்டாம் என்றார் மாசேதுங். முள்ளிவாய்க்காலில் மூண்ட நெருப்பு இதைத்தான் சொல்கிறது. அதில் விளைந்த ஒரு நெருப்புக் கீற்றுதான் இந்த ஆண்டகை பாட்டிலக்கிய நூல்’’என்றார்.
இந்த நெருப்பு சிங்கள வெறியர்களின் குரவலையை கடித்து குதறும்., வெகு விரைவில்.
0 comments :
Post a Comment