சென்னை : ஐ.பி.எல்.,சீசன் 4ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெங்களூருவை 58 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
டாஸ் வென்ற சென்னை : ஐ.பி.எல்., சீசன் 4ல் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று முதலி்ல் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
ஆபார துவக்கம் : இதனையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய சென்னை அணியின் ஹசியும், முரளி விஜய்யும் அபார துவக்கம் தந்தனர். தமுதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 160 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடிய ஹசி 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து சையத் முகமது பந்தில் ஆட்டமிழந்தார்.
சதம் நழுவல் : இதன் பின்னர் விஜய்யுடன் தோனி ஜோடி சேர்ந்தார். சிறிது நேரத்தில் 188 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முரளி விஜய் 52 பந்துகளில் 95 ரன்களுக்கு அவுட்டாகி சதத்தை நழுவ விட்டார். அடுத்த பந்திலேயே கேப்டன் தோனி 22 ரன்களுக்கு ஸ்ரீநாத் அரவிந்த பந்தில் அவுட்டானார்.
பெங்களூருவுக்கு இலக்கு : கடைசி ஓவரில் மோர்கல் 2 ரன்களுக்கும், ரெய்னா 8 ரன்களுக்கும் அவுட்டானார். கடைசி பந்தில் பிராவோ சிக்சர் அடித்தார். இறுதியில் சென்னை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் கெயில் 2 விக்கெட்களும், ஸ்ரீநாத் அரவிந்த் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.
அதிர்ச்சி துவக்கம் : இதன் பின்னர் 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 4வது பந்தில் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். இதன் பின்னர் அகர்லாவ்ல 10 ரன்களுக்கு அவுட்டானார்.
கோக்லி ஆறுதல் : ஒரு முனையில் விக்கெட்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் விராத் கோக்லி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஆனால் கோக்லி 36 ரன்களுக்கும், ஏபி டி வில்லியர்ஸ் 18 ரன்னுக்கும் அவுட்டானார். லூக் போமர்ஸ்பாச் 2 ரன்னுக்கும், கேப்டன் வெட்டோரி ரன் ஏதுவும் எடுக்காமலும், அபிமன்யு மிதுன் 11 ரன்னுக்கும் அவுட்டாயினர். கடைசி கட்டத்தில் திவாரியும் ஜாகிர் கானும் இணைந்து கவுரவமான ரன்கள் எடுக்க போராடினர். ஜாகிர்கான் 21 ரன்களுக்கு அவுட்டானார்.
0 comments :
Post a Comment