Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, May 14, 2011

புலிகளுக்கு மனிதாபிமானம் காட்டிய , நார்வே அதிகாரிகள் ?

கொழும்பு : இலங்கையில் ராணுவம் கடுமையான நடவடிக்கை எடுத்ததால் நாட்டைவிட்டு விடுதலைப் புலிகள் சிலர் தப்பித்துச் செல்ல கொழும்பில் உள்ள நார்வேத் தூதரக அதிகாரிகள் உதவினர். 

12 புலிகள் தப்பித்துச் செல்ல உதவியுள்ளனர். அவர்களுக்கு விமான டிக்கெட், விசா வாங்கிக் கொடுத்தது முதல் அனைத்து உதவிகளையும் நார்வேத் தூதரக அதிகாரிகள் செய்தனர் என்று நார்வேயின் ஆப்டென்போஸ்டன் என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல் இலங்கை அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலின் உண்மைத் தன்மையை அறியுமாறு நார்வேயில் உள்ள தங்களது நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, விடுதலைப் புலிகள் தப்பிக்க உதவியது உண்மைதானா என்று நார்வே நாட்டின் வெளியுறவு மேம்பாட்டு அமைச்சர் எரிக் சோல்கைமிடம் கேட்டதற்கு, எங்கெல்லாம் மக்கள் இக்கட்டான சூழலில் சிக்குகிறார்களா அவர்களுக்கு உதவுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது நார்வே. மனிதாபிமான உதவிகளை செய்வதை தனது கடமையாகவும் நினைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையே கடுமையாக மோதல் நடந்த போது இருதரப்பையும் சமாதனப்படுத்த நார்வே அரசு நடவடிக்கை எடுத்தது. நார்வே எடுத்த முயற்சியின் விளைவாக இரு தரப்பினருக்கும் இடையே 2002-ல் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இருப்பினும் இருதரப்பினரிடையே அவ்வப்போது மோதல் நீடித்து வந்தது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!