சட்டசபை செயலர் ஜமாலுதீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வரும் 23 ம் தேதி மதியம் 12:30க்கு சட்டசபை கூடுகிறது. இந்நாளில் எம்.எல்.ஏ.,க்கள் பதவி ஏற்பர். தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்படும் பின்னர் வரும் 27ம் தேதி காலை 9 மணிக்கு சபாநாயகர், துணைசபாநாயகருக்கான தேர்தல் நடத்தப்படும். ஜூன் 3 ம் தேதி காலை 10 மணிக்கு கவர்னர் உரை நிகழ்த்துவார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தூரார் தோட்டத்தில் பல கோடி செலவில் கட்டப்பட்ட புதிய சட்டசபை வளாகத்திற்கு செல்ல மாட்டேன் என ஜெ., கூறியிருந்தார் அதன்படி பழையை செயின்ட்ஜார்ஜ் கோட்டைப புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தி.மு.க., காலத்தில் சுமார் ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட அந்த தலைமை செயலகத்தை ஜெ., சர்கஸ் கூடாரம் என்று வர்ணித்திருந்தார். இந்த கட்டட பணிக்கும், தலைமை செயலகம் மாற்றத்திற்கும் ஜெ., எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதன்படி தான் முதல்வராக பொறுப்பேற்றதும், ஜெ., மீண்டும் புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டசபை கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரத்தில் இந்த சபை மாற்றத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை கோர்ட் நிராகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment