லண்டன் : கம்பெனிகள் மூலம் வருகை தரும் இந்திய தொழில் நுட்ப பணியாளர்கள் குறித்து, பிரிட்டன் பொதுக்கணக்கு குழு கவலை தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் உள்ள நிறுவனங்கள், அதிகளவில், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரவழைத்து தங்கள் வேலைகளை முடித்து கொள்கின்றன. டாடா கன்சல்டன்சி நிறுவனம், விப்ரோ, எச்.சி.எல்., மகேந்திரா, காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தொழில் நுட்ப வல்லுனர்கள் அதிக அளவில் பிரிட்டனில் பணிபுரிகின்றனர்.
வேலைக்கு வரும் பணியாளர்கள் பலர், விசா காலம் முடிந்தும், பிரிட்டனில் தங்கி விடுகின்றனர். குடியேற்றத்துறை இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை' என, பொதுக்கணக்கு குழு தெரிவித்துள்ளது.பிரிட்டனில், விசா காலம் முடிந்து, ஒரு லட்சத்து, 81 ஆயிரம் பேர் தங்கியுள்ளதாகவும், இவர்களது வருகையை குறைக்கும் நடவடிக்கையில் பிரிட்டன் குடியேற்றத்துறை தவறி விட்டதாகவும், பொதுக்கணக்கு குழு தலைவர் மார்க்கரெட் ஹோட்ஜ் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment