Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, May 5, 2011

"வானம்" வசப்படுமா? சிம்புவுக்கு!!

மின்னலாய் மழையாய் வெயிலாய் நிழலாய் என வானம் படத்தில் பல வித்தியாச உணர்வுகள். ஏதோ ஒரு வித தேடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிற ஐந்து வெவ்வேறு கதைகள். இந்த ஐந்து கதாபாத்திரங்களும் சந்திக்கிற ஒரு புள்ளி தான் க்ளைமாக்ஸ்!

கலர் கலர் கமர்ஷியல் ஜிகினா வேலைகள் கண்ணை உருத்தினாலும் ஒரு நல்ல கருத்தை சொல்ல வந்திருக்கிறது வானம் டீம். தெய்வம் வாழ்வது எங்கே, தவறுகளை உணரும் மனிதன் நெஞ்சில்... என்ற நா.முத்துக்குமாரின் வரிகள் தான் படம். தவறுகளை உணரும் மனிதனின் மூலம் ஒரு நல்ல சமுதாயம் நாளை உருவாகும் என்பதே கதையின் மையக் கருத்து.

சிம்புவும் சந்தானமும் - சென்னை பெசன்ட் நகர் குப்பத்தில் வசிக்கிறவர்கள். கேபிள் டி.வி பணத்தை வசூல் செய்யும் கேபிள் ராஜாவாக சிம்பு. பணக்காரனாக பிறக்க முடியாத சிம்பு, பணக்கார மாப்பிள்ளையாக வேண்டும் என்ற பிளானில் ஒரு பணக்கார அமுல் பேபியை காதலிக்கிறார். ஆனால் சிம்பு குப்பத்தில் இருப்பவர் என்ற உண்மையான மேட்டர் அம்மணிக்கு தெரியாது. அவர் நண்பராய் சந்தானம்.

அனுஷ்கா - ஆந்திர எல்லை ரெட் லைட் பகுதியில் ராணியம்மா கம்பனியில் வேலைப்பார்க்கிற விலைமாது. சரோஜான்னா அவ்வளவு மவுசு! அவளுக்கு ஒரு கனவு இருக்கிறது. தனியா பிஸ்னஸ் பண்ணி சம்பாதிக்கனும். ராணியம்மாவிற்கு அல்வா கொடுத்துவிட்டு தன் கனவை சுமந்தபடி தன் தோழியின் துணையோடு சென்னை வருகிறார்.

பரத் - ஒரு இசைக் கலைஞர். தன் இசைக் குழுவோடு லைவ் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கனவு! ஒரு நாள் இந்த உலகம் தன் புகழை சொல்லும் என்ற லட்சியத்தோடு தன் இசைப் பயணத்தை நோக்கிப் பயணிக்கிறார். அவருக்கு ஜோடி வேகா.

சரண்யா தன் மாமா மற்றும் மகனோடு - பள்ளிப்படிப்பு இல்லாத சரண்யா. தன் மகன் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். வட்டிக்காரன் தொல்லை, மகனை வேலைக்கு அனுப்ப வேண்டிய நிலை. கடனை அடைக்கவும் தன் மகனின் படிப்பு செலவிற்காகவும் தன் கிட்னியை விற்க துணிகிறார்.

பிரகாஷ் ராஜ் - இஸ்லாம் மதத்தை சார்ந்தவர். மதத்தின் பெயரால் நடந்த கலவரத்தில் கற்பவதியான தன் மனைவியின் வயிற்றில் வளரும் இரட்டைக் குழந்தைகளை பறிகொடுக்கிறார். அதே சமயத்தில் தன் தம்பியையும் பிரிந்துவிடுகிறார். தொலைந்துபோன தம்பியைத் தேடி சென்னை வருகிறார்கள் கணவனும் மனைவியும்.

இந்த ஐந்து கதைகளும் க்ளைமாக்சில் இணைத்திருக்கிறார் இயக்குனர் க்ரிஷ்.

இந்தக் கதையை சிம்பு தேர்ந்தெடுத்த காரணத்திற்காய் ஆயிரம் நல்ல வார்த்தைகளால் அவரை அபிஷேகம் செய்யலாம். தத்துவம் பேசி வரும் சில பெரிய நடிகர்கள் கூட கமர்ஷியல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்க, இளைய நடிகர்கள் இப்படி ஒரு கருத்துள்ள கதையை தேர்வு செய்ததற்காக டன் டன்னாய் பாராட்டலாம்!

சிம்புவும் சந்தானமும் அடிக்கிற லூட்டி செம ஜாலி. இவர்களுடன் சேர்ந்துகொண்டு படத்தின் தயாரிப்பாளர் விடிவி கணேஷும் கலக்குகிறார். சிரிக்க வைத்து வரும் சிம்பு, க்ளைமாக்சில் கொஞ்சம் சீரியஸாகி அனைவரின் கைத்தட்டல்களையும் அள்ளிக் கொள்கிறார். அதுவும் சரண்யாவிடம் திருடிய பணத்தை திருப்பி கொடுக்கிற காட்சியில் சிம்பு பிண்ணிட்டார்!

அனுஷ்கா சரோஜாவாக அசால்ட் பண்ணுகிறார். காமெடி நடிகர் ப்ரம்மாநந்தா என்னை கல்யாணம் பண்ணிக்கோ என்றதும்... என்னது எப்பவுமே ஒரே ஆளா! என பஞ்ச் வைக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் டாக்டரிடம் தன் தோழியை காப்பாற்ற சொல்லும் அனுஷ்கா, நான் வேணும்னா உங்க கூட படுக்குறேன் சார், எத்தனை முறை வேண்டுமானாலும் படுக்குறேன் சார்... என அழுதுகொண்டு சொல்வது நச்.

பரத் ஓவர் அலட்டல். ஆட்டத்தை இன்னும் கொஞ்சம் குறைத்துக் கொண்டிருக்கலாம். காதல், வெயில், இந்தப் படங்களில் நடித்த பரத்தை தேடவேண்டி இருக்கிறது. சரண்யாவும் பிரகாஷ் ராஜும் சிறந்த நடிகர்கள் என்பதை யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருவருமே கதைக்கு தேவையான நடிப்பு. க்ளைமாக்சில் கைத் தட்ட வேண்டிய பல காட்சிகள் இருக்கிறது.

எவன்டி உன்னப் பெத்தான்... சிம்புவின் ரசிகர்களுக்கு விருந்து படைகிற பாடல். அனுஷ்காவை இன்னும் கொஞ்ச நேரம் ஆடவிட்டிருக்கலாமே என்பது ரசிகர்களின் ஏக்கம். தெய்வம் வாழ்வது எங்கே... என்று பல இடங்களில் ஒலிக்கும் யுவனின் குரல் சலிக்கவில்லை. மெலடி குத்து ராப் என யுவன் இசைவேட்டையாடி இருக்கிறார். நிரவ்ஷாவின் ஷாட்டும் ஆண்டனியின் கட்டும் தேவைக்கு ஏற்ப தெளிவாகவே செயல்பட்டிருக்கிறது.

வானம் ஒரு நல்ல கருத்தை சொல்ல வந்தாலும் இதில் சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது, தீவிரவாதிகள் மருத்துவமனையின் நோயாளிகளையும் பணியாளர்களையும் சரமாறியாக சுட்டு வீழ்த்துவது கர்ன கொடூரம். மும்பையில் நடந்த நிகழ்வைத் தான் எடுத்திருக்கிறார்கள் என்று நம்மை யூகிக்க வைக்கிறார்கள். படத்தில் காட்டப்படும் தீவிரவாதியின் வசனம் இது, சென்னைல குண்டு வச்சா வெடிக்காதா என்ன... வெடிக்கும்! (ஏம்பா இந்த கொலைவெறி?)

சென்னையில் தான் பிற மாநிலத்தின் வியாபாரிகளும் சுதந்திரமாக வியாபாரம் செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்தை ஒப்பிட்டுப் பார்த்தாலும் தமிழகம் தான் எந்த அசம்பாவிதங்களும் இல்லாத மாநிலமாக திகழ்கிறது. இதை மறுத்துப் பேசுகிற சில கட்சிகள் இருப்பதே வானத்தில் கொஞ்சம் வருத்தம். தெலுங்கு படத்தின் ரீமேக் என்பதால் மட்டுமே இதை பொருத்துக் கொள்ளலாம்.

Reactions:

2 comments :

எனினும் படத்தின் எழுத்தோட்டத்தில் "இணை" மற்றும் "துணை" எனும் சொற்களை "இனை", "துனை" என்று எழுதப்பட்டமை மிக்க வருத்தத்திற்குரியது.

தல படம் தெலுங்குல பட்டைய கிளப்புச்சு தமிழ்லே STR இருக்கும்போது எப்படி நல்லாயிருக்கும். சந்தானம் இருந்ததாலெ முதல் பாதி பரவாயில்லே. படத்தோட ஹிட் சாங் எவண்டி உன்ன பெத்தான் தமிழ் வரிக்கு. இங்கே செல்லவும் http://shashtikavasam.blogspot.com/2011/05/blog-post_07.html

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!