Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, May 3, 2011

தேர்தல் களம், பதவி ஏற்பு விழாவுக்கு தயாராகிறது விளையாட்டு அரங்கம்!

சென்னை : தமிழகத்தில் புதிய அமைச்சரவை அமையவுள்ள சூழலில், பதவியேற்பு நிகழ்ச்சி எங்கு நடைபெறும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கப் போகிறது, கூட்டணி ஆட்சியா? அதிக இடங்களைப் பெற்ற தனிக்கட்சியா என்ற கேள்விகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவற்றுக்கான விடை மே 13-ல் தெரிந்துவிடும்.

இந்தச் சூழ்நிலையில், புதிய அமைச்சரவை பதவியேற்புக்கான முன் ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது. பதவி ஏற்பதற்கான இடங்கள், பெரும்பான்மை கட்சி அல்லது அணியின் தலைவரது முடிவைப் பொறுத்தது என்றாலும் அரசின் சார்பில் சில இடங்கள் அடையாளமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நேரு உள்விளையாட்டு அரங்கம், வள்ளுவர் கோட்டம், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கம் போன்ற இடங்களிலே புதிய அமைச்சரவையின் பதவியேற்பு நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

முடிவடைவதால் அதற்குள்ளாக புதிய அமைச்சரவை பதவியேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் புதிய அரசு பதவியற்க ஓரிரு நாட்களே உள்ளன.

அப்போது பதவியேற்புக்கான இடங்களைத் தேர்வு செய்வதில் சிரமம் இருக்கக் கூடாது என்றும், இடத்தை இப்போதே தேர்வு செய்து அவற்றைச் சுத்தப்படுத்தி புதுப்பிக்கும் பணிகளைச் செய்தால் பதவியேற்பு நிகழ்வை எளிதாக நடத்தலாம் என்று மூத்த அதிகாரிகள் கருதுகின்றனர்.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கம் உட்பட சில இடங்கள் புதிய அமைச்சரவையின் பதவியேற்புக்குத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பதவியேற்புக்கான இடம் இறுதி செய்யப்பட்டு விட்டால் இதர ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒரு நாள் போதும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!