Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, May 2, 2011

தேர்தல் ஆணையம் பற்றி ஒப்பாரி வைக்கும் ஆளும் கட்சி?

தமிழகத்தில் மட்டும் தேர்தல் ஆணையம் அதிக கெடுபிடிகளை விதித்துள்ளது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியிருப்பது தொடர்பாக முதல் அமைச்சர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையம் என்ற அமைப்பு விருப்பு, வெறுப்புகளை அகற்றி அனைவருக்கும் பொதுவாகவும், நடுநிலையோடும் செயல்பட வேண்டிய ஒரு அமைப்பு. இத்தகைய தேர்தல் கமிஷன் வெவ்வேறு அளவுகோல்களை கடைப்பிடிக்கக் கூடாது என்பதே மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து ஆகும்.

தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டு, முறைப்படுத்த வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஒரே அமைப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நடைமுறையைப் பின்பற்றுவது ஜனநாயகத்தை வளப்படுத்துவதற்கு உதவாது.

இந்திய அரசியல் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு அமைப்பும், கடிவாளமின்றி ஓடுவதை அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியிருப்பதைப்போல தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்படுவதுடன், அரசியல் சட்ட நிபுணர்களையும் கலந்தாலோசித்து முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சட்டத்தின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை உடையவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து உதாசீனப்படுத்தக் கூடியது அல்ல.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!