புகையிலை இல்லாத உலக தினம் வருகிற 31-ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
இதையொட்டி குவைத்தில் நடந்த ஒரு விழாவில் அந்த நாட்டு அரசு துணைச் செயலாளர் யூசுப் அலி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, குவைத் நாட்டு மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் புகைப்பிடிக்கின்றனர். புகைப்பிடிப்பதால் உடல் நலம் கெடுகிறது. இதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குவைத் நாட்டில் புகைப்பிடிக்க மக்கள் ஆண்டுக்கு ரூ.832 கோடி செலவு செய்கின்றனர். குவைத்காரர் ஒருவர் ஆண்டுக்கு 2330 சிகரெட் புகைக்கிறார். புகையிலை இல்லாத உலக தினத்தை அனுசரிப்பதன் மூலம் புகைப்பிடிக்கும் பழக்கத்தை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
1 comments :
உங்கள் பதிவு நன்றாக இருந்தது சினிமா சம்பந்தமான செய்திகளை கீழே பதியவும்.Share
Post a Comment